“உபர் – ஓலா” நிர்மலா சீத்தாராமனை அறிவுப்பூர்வமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
புதிய கார் வாங்குவதற்கு EMI கூட கட்ட தயாராக இல்லாத தற்கால இளைஞர்களால் தான் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்னை கிண்டியில் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கருத்து கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
புதியதாகக அறிமுகப்படுத்தப்படும் வாகனங்களை வாங்குவதற்கு இக்கால இளைஞர்களின் மனநிலையும் முக்கிய காரணம். அவர்கள் புதிய கார் வாங்குவதற்கு EMI கட்ட தயாராக இல்லை. ஆனால், உபர், ஓலா மூலம் வாடகை காரிலோ அல்லது மெட்ரோ ரயில் மூலமோ பயணிக்க விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்தார். இந்த கருத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் விமர்சித்தனர். மேலும் ட்விட்டரில் கேலிக்குரிய வகையில் ட்ரெண்டாகி உள்ளார் சீதாராமன். #BoycottMillennials, #SayItLikeNirmalaTai ஆகிய ஹாஷ்டேக்குள் மூலம் நெட்டிசன்கள் மீம்ஸ்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அகோரிகள் அதிகரித்துள்ளதால் உள்ளாடைகளின் விற்பனை மந்தம். ரியல் எஸ்டேட் தொழில் சரிவுக்கு ஓயோ அறைகள்தான் காரணம். உணவு உற்பத்தி குறைவுக்கு ஸ்விக்கி, ஜொமாட்டோதான் காரணம். ரீட்டைல் மார்க்கெட் சரிவுக்கு அமேசான், பிளிப்கார்ட்தான் காரணம். ஆனால் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் மட்டும் எதற்கும் காரணம் அல்ல. இதுபோன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நெட்டிசன்கள் இரண்டாவது நாளாக கலாய்த்து வருகின்றனர்.

Leave A Reply