உயர் கல்வி பாசிச ஆணையம்

0

உயர் கல்வி பாசிச ஆணையம்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் 1956ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி). அதை கலைத்து விட்டு ஜனநாயக விரோதமாக ஹையர் எஜுகேஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (இந்திய உயர் கல்வி ஆணையம்) என்ற பெயரில் புதிய நிறுவனத்தை துவக்க மோடி அரசு ஒரு தலைபட்சமாக தீர்மானம் எடுத்ததற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. புதிய உயர் கல்வி ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் மத்திய அரசால்தான் நியமிக்கப்படுவார்கள். இதன் மூலம் யு.ஜி.சி. நிர்வகித்து வந்த நிதியுதவி தொடர்பான பொறுப்புக்கள் அனைத்தும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

பிடியை இறுக்கும் பாசிசம்

பல்கலைக் கழகங்களுக்கும், உயர் கல்விக்கும் அரசு அளித்து வரும் அனைத்து விதமான நிதியுதவிகளையும் படிப்படியாக நிறுத்துவதற்கான கொள்கை ரீதியான நகர்வுகள் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. முதலாவதாக உயர் கல்வி ஆணையம் நடைமுறைக்கு வரும்போது பல்கலைக்கழக மானிய குழு கலைக்கப்பட்டு மானியம் வழங்குவதும் நிறுத்தப்படும். உயர் கல்வி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்த பிறகே இனி மனிதவள மேம்பாட்டுத்துறை ஏதேனும் நிதிகளை அனுமதிக்கும். அதாவது மானியத்தின் அடிப்படை அளவுகோல்களை இனி சங்கபரிவார சக்திகள் தீர்மானிக்கும் என்று பொருள். இதன் காரணமாக பல்கலைக்கழகங்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும். சுதந்திரமாக இயங்கும் பல்கலைக்கழகங்களுக்கு அரசு மானியம் வழங்காது. இதன் மூலம் மத்திய அரசின் குறுகிய நலன்கள் அடிப்படையிலான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இதன் மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவிகள் அனுமதிக்கப்படும். தனியார்-அன்னிய- கார்ப்பரேட் பல்கலைக்கழக கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், உயர் கல்வியை முழுமையாக வியாபாரமயமாக்கவும், வகுப்புமயமாக்கவும் இதன் மூலம் வழி திறக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.