உயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்?

0

உயர் சாதியினருக்கு மட்டுமா உயர்கல்வி நிறுவனங்கள்?

காசையும் காட்டையும் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்வார்கள். ஆனால், படிப்பை மட்டும் திருட முடியாது’’ சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் வசனம். ‘‘ஆர்.எஸ்.எஸ்.காரனா நம்மை படிக்க வேண்டாம் என்று தடுக்கிறான். நாம் படிக்காமல் இருந்துவிட்டு அவன் மீது பழியை போடக்கூடாது.’’ முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த அறிவுஜீவிகள் சிலர் அடிக்கடி கூறும் கருத்து இது. ஆனால், உண்மையில் முஸ்லிம்களையும் தலித்களையும் படிப்பதில் இருந்து தடுப்பதற்கு ஏராளமான நேரடியான, மறைமுகமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. சென்னை ஐஐடியில் சமீபத்தில் நடைபெற்ற நிறுவனப் படுகொலை இதற்கான சமீபத்திய சான்று.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பாத்திமா லத்தீஃப் (19). சென்னை ஐஐடியில் வி.கி. பிuனீணீஸீவீtவீமீs முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த அவர், நவம்பர் 9 அன்று விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முஸ்லிம் மற்றும் தலித் மாணவர்களுக்கு எதிராக உயர்கல்வி நிறுவனங்களில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் காரணமான மனஅழுத்தத்தின் காரணமாகவே இந்த மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்வதால் இதனை நாம் நிறுவனப் படுகொலை என்று அழைக்கிறோம். தனது மகள் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்புகிறார் பாத்திமாவின் தந்தை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.