உயிரோட்டமான சமூகத்தின் அடையாளம்

0

உயிரோட்டமான சமூகத்தின் அடையாளம்

நாம் ஆதத்தின் வழித்தோன்றல்களுக்கு கண்ணியம் அளித்துள்ளோம். மேலும், தரையிலும் கடலிலும் அவர்களுக்கு வாகனங்களை வழங்கினோம். தூய பொருள்களில் இருந்து அவர்களுக்கு ஆகாரம் வழங்கினோம். மேலும், நாம் படைத்த பெரும்பாலான படைப்புகளைவிட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம். இவை நமது கொடைகளாகும். (அல் குர்ஆன் 17:70)

இறைவனின் வேதமான அல் குர்ஆன் மனித சமூகத்தை எத்துணை கண்ணியமாக, சிறப்பு மிக்கவர்களாக படைத்து பரிசுத்தமானவற்றை அவர்களுக்கு உண்ணவும் பருகவும் இறைவன் கொடுத்து இருக்கின்றான் என்று பறைசாற்றுகின்றது. ஆனால் இன்று மனித வாழ்வு எப்படி இருக்கின்றது? மனிதனை மனிதனே வேட்டையாடுகிறான். இன்றைய உலகம் முதலாளித்துவ கொள்ளையர்கள், நவீன காலனித்துவ சக்திகள், வலதுசாரிகளின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி, வீழ்ச்சியின் விகிதம் முதலாளித்துவ மாதிரி வளர்ச்சி மற்றும் தோல்வியை பிரதிபலித்து வருகின்றது. முதலாளித்துவ மாதிரி வளர்ச்சி மக்களுக்கும் இயற்கைக்கும் விரோதமானது என்பது நிரூபணமாகியுள்ளது. எங்கும் திறந்துவிடப்பட்டுள்ள தாராளவாத பொருளாதார சந்தையின் கீழ் உழைக்கும் வர்க்கம் எவ்வித ஆதாயத்தையும் பெறாத போது சாதாரண பணக்காரர்கள் ராக்கெட் வேகத்தில் மிகப்பெரிய பணக்காரர்களாக மாறி வருகின்றார்கள். சர்வதேச அரசியல் களம் முதல் ஒரு கிராமவாசியின் சாதாரண நுகர்வு வரை மனித வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் ஏகபோக மூலதனம் ஆழமாக ஊடுருவியுள்ளது. இதர நாடுகளில் சர்வதேச சக்திகளால் திணிக்கப்பட்டு வரும் பொருளாதார நிறுவனங்கள் மற்றும் வளர்ச்சி மாதிரிகள் அநீதிகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் ஊக்குவித்து ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளியை தொடர்ந்து அதிகரிக்கச் செய்து வருகின்றது. சர்வதேச உடன்படிக்கைகள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உடன்படிக்கைகள் ஆகியன வல்லரசுகளின் காலனித்துவ, முதலாளித்துவ சுரண்டலுக்கான சாதுர்யமான கருவிகளாக மாற்றப்பட்டு விட்டது. இவை பலவீனமான நாடுகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான வழிமுறைகளாகிவிட்டது, பெரும் பொருட்செலவிளான போர்களின் மூலம் கூட இதனை சாதித்திட இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.