உறவுகளின் புனிதம்

0

உறவுகளின் புனிதம்

“மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்).- நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4:1)

ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களிலிருந்து உருவான மனிதர்கள் ஒரே குடும்பமாவர். சமூக உயிரினங்களான மனிதர்கள் பல வகையான உறவுகளையும் உரிமைகளையும் கடைபிடிக்கின்றனர். அல்லாஹ்வின் சட்டங்கள் அந்த உறவுகளை புனிதமாக்குகின்றன. அந்த சட்டங்களை கடைபிடிப்பதன் மூலம் திருப்திகரமான மனித வாழ்வு நிறுவப்படுகிறது. அதனை மீறும்போது அனைத்துமே சீர்குலைந்து விடுகிறது.

வாழ்க்கையில் சுக, துக்கங்கள் மனித உறவுகளின் தொடர்பில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை பொறுத்து அமையும். இஸ்லாம், அல்லாஹ்வுடனான உறவை உயிரோட்டமாக மாற்றும் வணக்க வழிபாடுகள், மனிதர்களுடனான உறவை வலுப்படுத்தும் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுதல் ஆகிய இரு பகுதிகளை கொண்டது.

பெற்றோரும் & -பிள்ளைகளும், கணவனும் & -மனைவியும், அண்டை வீட்டாரும் & -அயல்வாசிகளும், நண்பர்களும் &- தோழர்களும், உரிமையாளரும் & -நுகர்வோரும், முதலாளியும் & -தொழிலாளியும், ஆட்சியாளரும் & -குடிமக்களும், நீதிபதிகளும் & -வழக்குதாரர்களும், சட்டத்தை பரிபாலனம் செய்பவர்களும் & -சட்டத்தை பின்பற்றுபவர்களும், தலைவரும் & -தொண்டர்களும், ஆசிரியரும் & மாணவர்களும்… இவர்களுக்கிடையேயான உரிமைகளும் பொறுப்புகளும் நல்லெண்ணத்தோடு நிறைவேறும்போதே சமநிலையான சமூக சூழல் நடைமுறைக்கு வரும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.