உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியீடு: அதில் இந்தியா எந்த இடம் தெரியுமா?

0

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செயல்பட்டுவரும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் 2019-ம் ஆண்டுக்காக உலகின் அமைதியான நாடுகளின் பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த நாடு இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

 

163 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 2018 ஆம் ஆண்டு 137வது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 4 இடங்கள் பின்னாடி சென்று 141வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 720வது இடத்திலும், நேபாளம் 76வது இடத்திலும், வங்கதேசம் 101வது இடத்திலும் உள்ளன. பூடான் 15வது இடத்திலும் பாகிஸ்தான் 153வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து ஜப்பான் 9வது இடத்திலும், அமெரிக்கா 128வது இடத்திலும், ரஷ்யா 154வது இடத்திலும் உள்ளது.

இதனை தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போதுஓரு இடம் முன்னேறியுள்ளது.

Leave A Reply