உலகிலேயே ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!

0

புது டெல்லி: உலகில் மிக அதிகமான ஆயுதங்களையும், ராணுவ உபகரணங்களையும் இறக்குமதிச் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.சர்வதேச அளவில் 15 சதவீத ஆயுதங்கள் இந்தியாவில் இறக்குமதிச் செய்யப்பட்டுகிறது.

இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்குவதில் ரஷ்யா, முதலிடத்தில் உள்ளது.சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்(எஸ்.ஐ.பி.ஆர்.ஐ) சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005-09, 2010-14 காலக்கட்டங்களில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 140 சதவீதம் அதிகரித்துள்ளது.2010-14 காலக்கட்டத்தில் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட 3 மடங்கு ஆயுதங்களை இந்தியா இறக்குமதிச் செய்துள்ளது.ஆசியாவில் இறக்குமதிச் செய்யப்படும் ஆயுதங்களில் 34 சதவீதத்தை இந்தியா இறக்குமதிச் செய்கிறது.

சீனாவின் ஆயுத இறக்குமதி 10 ஆண்டுகளில் 42 சதவீதம் குறைந்துள்ளது.

Comments are closed.