உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை!

0

108 நாடுகளில் உள்ள 4300 நகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் (கீபிளி) 2016 ஆம் ஆண்டு நடத்திய விரிவான ஆய்வின் அறிக்கையும், பகுப்பாய்வும் கடந்த வாரம் வெளியானது. உலக மக்கள் தொகையில் 90 சதவீத மக்கள் மாசடைந்த காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள். வளர்ச்சியடைந்த, வளரும், ஏழை நாடுகள் பாகுபாடின்றி உலகின் பெரும்பாலான நகரங்களும் மாசடைந்த காற்றைத்தான் வெளியிடுகின்றன. இந்தியா, சீனா ஆகியன உலகிலேயே மிகவும் நோய் பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் நிலவும் நாடுகளாக உள்ளன.

மிகவும் அசுத்தமான காற்றுள்ள 20 நகரங்களில் 14 நமது நாட்டில் உள்ளன. உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தும் பாதுகாப்பு வரம்பை விட 17 மடங்கு அதிகமாக இந்த நகரங்களில் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. மாசடைந்த காற்றால் ஆண்டு தோறும் 70 இலட்சம் பேர் மரணத்தை தழுவுகின்றனர். அதில் பெரும்பாலோர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். லான்செட் கமிஷனர் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25 இலட்சம் பேர் மாசுபாடு காரணமாக இறக்கின்றனர். 2.6 கோடி பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நோயாளிகளாக மாறுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வட இந்தியாவின் 14 நகரங்களுக்கு மட்டுமான நிலைமை அல்ல. அனைத்து நகரங்களிலும், பெரும்பாலான கிராமங்களிலும் மூச்சை திணறச் செய்யும் விபத்தாக இது மாறியுள்ளது. தேசிய சுத்தமான காற்று திட்டம் (நேசனல் க்ளீன் ஏர் ப்ரோக்ராம்) மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறுவது என்னவெனில், இந்தியாவில் ஒரு கிராமத்தில் கூட காற்று மாசுபாட்டைக் குறித்து அறிவதற்கான எந்தவொரு வசதியையும் இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டை அறிவியல் பூர்வமாக கண்காணிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் கட்டமைப்புள்ள ஒரே நகரம் இந்தியாவில் டெல்லி மட்டுமே. கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றுவதாக அதிகமாக பழி சாட்டப்படும், மாசுபாட்டால் அதிகம் பேர் நோயாளிகளாக மாறும், அதிகம் பேர் மரணிக்கும் ஒரு தேசம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் காட்டும் அலட்சியத்தை உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தோலுரித்து காட்டுகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.