உலக வரலாற்றை மாற்றிய இரவு

0

உலக வரலாற்றை மாற்றிய இரவு

புனித ரமலான் மாதம் ஏனைய மாதங்களில் இல்லாத பல்வேறு சிறப்புகளை சுமந்துள்ளது. அவற்றுள் முதன்மையானதும் தனிச்சிறப்புமிக்கதும் ஆயிரம் மாதங்களை விட சிறப்பு மிக்க புனித லைலதுல் கதர் இரவு என்பதை அல்குர்ஆனையும் சுன்னாவையும் ஆழமாகப் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

அல்குர்ஆனில் இறங்கிய முதல் வசனங்களை சூரா அலஃக்கும், அல்குர்ஆன் இறங்கிய கால சூழலை சூரா அல் பய்யினாவும் விளக்கும் அதே வேளை அல்குர்ஆன் இறங்கிய முதலாவது இரவை சூரா அல் கத்ர் மிகவும் அழகாக தெளிவுபடுத்துகின்றது. “நிச்சயமாக நாம் அதனை கத்ர் என்று சொல்லப்படக்கூடிய இரவில் இறக்கினோம்” என்றும் அந்த இரவு “ஆயிரம் மாதங்களை விட சிறந்தது” எனவும் அல்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அல் கத்ர் அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்களில் வந்துள்ள ‘அல் கத்ர்’ என்ற சொல்லை விளக்கும் குர்ஆனிய விரிவுரையாளர்கள் அதற்கு மொழி ரீதியான இரு கருத்துகளை முன்வைக்கின்றனர். இதில் நிர்ணயித்தல், திட்டமிட்டு வைத்தல் முதல் கருத்தாகவும் மகத்துவம், கண்ணியம் இரண்டாவது மொழி ரீதியான கருத்தாகவும் உள்ளது. எனவே இத்திருமறை வசனத்தின் கருத்தை இரண்டு வகையில் நோக்க முடியும்.

« நிச்சயமாக நாம் அதனை ஒரு மகத்துவமான இரவில் இறக்கினோம்.

« நிச்சயமாக நாம் அதனை விதியை நிர்ணயிக்கும் இரவில் இறக்கினோம்.

அல்குர்ஆன் இறங்கியது புனித ரமலான் மாதத்தில்தான் என சூரா கத்ரில் குறிப்பிடப்பட்ட போதும் சூரா அல் பகறாவின் 185வது வசனம் அல்குர்ஆன் இறக்கப்பட்ட ரமலான் மாதமென அதனைத் தெளிவுபடுத்துகின்றது. எனவே அல்குர்ஆன் இறங்கியது ரமலான் மாதத்தில் என்பதை சூரா அல்பகறாவும், ரமலானில் மகத்துவமிக்க லைலத்துல் கத்ர் எனவும் இரவில் இறங்கியது என சூரா அல் கத்ரும் தெளிவுபடுத்துகின்றன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.