உளவியல் ரீதியில் பாதுகாப்பற்றவராக மோடி உள்ளார் : அருண் ஷோரீ

0

முன்னாள் பத்திரிகையாளரும் பா.ஜ.க வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஷோரீ ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது “மோடி உளவியல் ரீதியாக பாதுகாப்பற்றவர் என்றும் தற்புகழ்ச்சியை ஆதரிப்பவர் என்றும் பலகீனமான நபர்கள் தன்னை சுற்றி இருப்பதை விரும்புபவர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது நேரு வை குற்றம்சாட்டுவது ஃபேஷன் ஆகிவிட்டது என்று கூறிய அவர், நேரு சக்தி வாய்ந்த ஆளுமைகளுடன் பணியாற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார். மோடியை குறிப்பிட்டு கூறாமல் பொதுப்படையாக கூறிய அவர் “ஒரு தலைவர் உளவியல் ரீதியாக பாதுகாப்பாக உணர வேண்டும். அவர் மற்றவர்களின் திறமைகள் குறித்து அச்சமுற்றாள் அவரால் சிறந்த ஒரு குழு ஒன்றை அமைக்கவே முடியாது” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் பதவி ஓய்வு பெற்ற டில்லி காவல் துறை தலைவர் பி.எஸ்.பாஸ்ஸி பற்றி கருத்து தெரிவிக்கையில், “அவர் ஆளும் வர்கத்தின் பிரதிநிதி போன்று செயல்பட்டு அந்த பதவியின் கண்ணியத்தை குலைத்துவிட்டார்” என்று கூறியுள்ளார். “மாற்றம் செய்யப்பட்ட வீடியோவை ஆதாரமாகக் கொண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் காவல் துறை கமிஷனரா இல்லை அரசு பிரதிநிதியா ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மோடி அரசினால் மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை குறித்து அச்சம் தெரிவித்த அவர் இன்னும் சிறிது காலங்களில் தகவல் அறியும் உரிமை உட்பட மக்களிடம் உள்ள அனைத்து உரிமைகளும் பரிக்கபப்டும் என்று கூறியுள்ளார்.

தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இனி வரும் காலங்களில் தேர்தல் மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி நடத்தப்படும்” என்று கூறியுள்ளார். மேலும் மோடி அரசின் முக்கிய கொள்கைகள் குறித்து பொதுமக்கள் பதிவு செய்து வைத்ததுக் கொள்ளுமாறு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

மோடியின் அமைச்சரவையில் உள்ளவர்கள் கடந்த பத்து வருடங்களில் எத்தனை பேர் ஒரு புத்தகம் வாசித்துள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஊடங்களின் பணி ஸ்டுடியோக்களில் விடாமல் கத்திக்கொண்டு இருப்பதில்லை என்றும் அரசு தவறு செய்யும் போது அதை விமர்சிக்காமல் இருப்பது தேசத்தை அழிவு பாதைக்கு இட்டுச்செல்லும் என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.