உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தொமர்

0

தமிழகத்தில் நீண்ட காலமாக உள்ளாட்சித்துறை தேர்தல் நடைபெறவில்லை. எல்லா அளவிலும் கரப்ஃஷன் – கமிஷன் – கலெஷன் தான் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தான் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முடியும். உள்ளாட்சி தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட குற்றவியல் சட்டத்திருத்ததை அமைச்சர் மேற்கொள்ளுவாரா? திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஏ.ராஜா கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். இது முக்கிய தேவை என்பதால் மத்திய அரசு அவ்வப்போது தமிழக அரசை கேட்டுக்கொண்டு வருகிறது. எந்தெந்த மாநிலங்களிலெல்லாம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லையோ அங்கேயெல்லாம் நிதி ஆணையத்தின் மூலம் மாநில அரசுக்கு ஒதுக்கபடவேண்டிய நிதியை வழங்கமாட்டோம். மத்திய அரசிடம் உள்ள நிதியை எப்போது வேண்டுமானாலும் வழங்க தயார். தேர்தல் எங்கெல்லாம் நடைபெறவில்லையோ அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று மத்திய விவசாயம் மற்றூம் ஊரக வளர்ச்சி பஞ்சாயித்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திர சிங் தொமர் பதில் அளித்தார்.

Comments are closed.