உ.பியில் “ஜெய் ஸ்ரீராம்” கூறச்சொல்லி இஸ்லாமிய சிறுவனைத் தாக்கிய இந்துத்துவ மதவெறி கும்பல்

0

மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தலித் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சியில் இருப்பாதால் பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் கொலைவெறி தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது சிறுவனை 4 பேர் கொண்ட இந்துத்துவா கும்பல் “ஜெய் ஸ்ரீராம்” கூறச்சொல்லி கொடூரமாகத் தாக்கியதோடு, அவர் தலையில் அணிந்திருந்த தொப்பியை அணியக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.

கதறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், இந்துத்துவா வெறிக்கும்பலிடம் இருந்து தாஜூதீனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு தாஜூதீன் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தை இந்துத்துவா மதவெறிக் கூட்டம் உபயோகித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவது வழக்குத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

Comments are closed.