உ.பி. குழந்தைகளை காப்பாற்றிய டாகடர் கஃபீல் கான்: அவதூறுகளும், தெளிவும்.

0

உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டின் காரணமாக 70 மேற்பட்ட குழந்தைகள் போதிய ஆக்சிஜன் இல்லாமல் BRD மருத்துவமனையில் உயிரிழந்தது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவு  அதிகரிக்காமல் இருந்ததற்கு காரணமாக போற்றப்படும் நபர் BRD மருத்துவமனையின் டாக்டர் கஃபீல் கான் ஆவார். இவர் இந்த சம்பவம் நடைபெற்ற அன்று நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்து தனது சொந்த பணத்தை செலவிட்டு அவரது முயற்ச்சியில் பல இடங்களுக்குச் சென்று ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்று வந்து குழந்தைகளின் உயிரை காத்துள்ளார். (பார்க்க செய்தி)

டாக்டர் கஃபீல் கானின் இந்த செயலால் மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஒரு கதாநாயனாக தெரியும் இவர் இந்துத்வ சங்கீகளால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு வருகிறார். காரணம் இன்றைய சுதந்திர இந்தியாவில் ஒருவர் சிறந்தவர் என்பதை தீர்மானிப்பது அவரது செயல் அல்ல, மாறாக அவரது மதமாக இருப்பதே. இன்னும் தங்களின் நிர்வாக சீர்கேட்டால் ஏற்பட்ட இழப்பை காட்டிலும் சங்கீகளுக்கு டாக்டர் கஃபீல் கானிற்கு கிடைக்கும் புகழை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

எந்த ஒரு நாட்டிலும் இது போன்ற கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த மரணங்கள் கொலையாகவே கருதப்படும். ஆனால் இந்த மரணங்களை சாதாரானமாக்கும் முயற்ச்சிகளில் பாஜக ஈடுபட்டது. உத்திர பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் இது போன்ற மரணங்கள் ஆகஸ்ட் மாதம் நிகழ்வது இயல்பு தான் என்று கூறினார். பாஜக தலைவர் அமித்ஷா வோ இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இது போன்ற மரணங்கள் நடப்பது சாதாரணம் என்று கூறினார். (பார்க்க செய்தி). உலகில் எந்த மூலையில் ஏதனும் ஆம்பாவிதங்கள் நடைபெற்றால் அதற்கு தனது வருத்தத்தை ட்விட்டரில் தெரிவிக்கும் மோடி, இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் மெளனம் சாதித்தார்.

இத்துடன் இந்த குழந்தைகளின் மரணங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்ப்பட்டது அல்ல என்றும் சுகாதாரக் கேட்டினாலும் தூய்மையின்மையாலும் ஏற்பட்டது என்று உத்திர பிரதேச யோகி அரசு தங்களின் குறைபாட்டை மறைக்கவும் முற்பட்டது. அப்படியானாலும் கூட இந்த அசம்பாவிதம் நடைபெற்ற கோரக்பூர் தொகுதி கடந்த 20 வருடங்களாக அதித்யநாத் வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மை இந்தியா திட்டத்தை நடிகர்களை வைத்து பிரபலப் படுத்திய பாஜக ஆட்சியில் கடந்த 20 வருடங்களாக பாஜக ஆண்டு வந்த பகுதியில் சுகாதாரக் கேட்டினால் இத்துனை குழந்தைகள் மரணித்துள்ளனர் என்பது பாஜக அரசிற்கு தான் தலைகுனிவு.

இந்த அவமானங்களை மறைப்பதற்காகத் தான் அவர்கள் தங்களின் போலிச் செய்தி எந்திரங்களில் அவர்களின் கற்பனைக் குதிரைகளை ஓட விட்டு டாக்டர் கஃபீல் கானிற்கு எதிராக பல கற்பனை கதைகளை புனைந்தனர்.

இந்த குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் டாக்டர் கஃபீல் கான் தான் என்றும் அவர் தான் BRD  மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை திருடிச் சென்றவர் என்றும் அதனால் தான் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் அத்துனை சிலிண்டர்களை மருத்துவமனைக்கு எடுத்து வர முடிந்தது என்று அவர் மீது குற்றம் சுமத்தி தங்களின் தவறுகளையும் இயலாமையையும் மறைக்க முற்பட்டுள்ளனர்.

இன்னும் கஃபீல் கான் மீதான இவர்களின் இந்த குற்றச்சாட்டு இத்துடன் நின்றுவிடவில்லை. இவர் கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர் என்றும் அகிலேஷ் யாதவ் கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு அதித்யநாத் அரசிற்கு களங்கம் விளைவிக்கவே இந்த குழந்தைகளை அவர் கொலை செய்துள்ளார் என்றும் இவர் மீதான குற்றச்சாட்டு பட்டியலை நீலச்செய்தனர் காவிகள்.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரனை நடத்திய காவல்துறை டாகடர் கஃபீல் கான் குற்றமற்றவர் என்று கூறியுள்ளது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் இந்த குற்றச்சாட்டுகள் அவருக்கெதிரான சதி என்றும் கூறியுள்ளது.

இவர்கள் கூறுவது போல கான் திரவ ஆக்சிஜன் திருடினார் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே? அதனை அவர் எங்கே எடுத்துச் சென்றார்  எவ்வாறு அவர் எடுத்துச் சென்றார்? இது தொடர்பாக இத்துனை வருடங்களில் அவர் மீது ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லயே ஏன்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக சம்பவத்தன்று குழந்தைகளின் உயிரை காப்பாற்ற கான் ஆக்சிஜன் சிலிண்டர்களை பல இடங்கள் சென்று  பெற்றதற்கு நேரில் கண்ட சாட்சியங்களின் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இது மத்திய ஆயுதப் படையான சாஸ்திர சீமா பல் (SSB) இடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

SSB இன் மக்கள் தொடர்பு அதிகாரி O.P.சாஹு வின் கூற்றுப்படி” BRD மருத்துவமனையில் நடைபெற்றது எதிர்பாராத நிகழ்வு, டாக்டர் கான், SSB யின் DIG யிடம் வந்து பல இடங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வாகனம் வேண்டும் என்று கேட்டார். உடனே அவருக்கு உதவி செய்ய 11 வீரர்களையும் DIG அவருடன் அனுப்பி வைத்தார். பல மணி நேரமாக இந்த வாகனம் பல பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரித்து BRD மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தன.” என்று கூறியுள்ளார்.

தன்னலம் பாராத டாக்டர் கானின் இந்த சேவை அரசியல் காரணங்களுக்காக திரித்துக் கூறப்படுவது மிக அருவருப்பானது. தங்களால் செய்ய இயலாததை ஒரு முஸ்லிம் மருத்துவர் செய்துவிட்டார் என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடாகத்தான் இந்த இந்துத்தவாவினரின் செயல்களை பார்க்க முடிகிறது.

Comments are closed.