உ.பி.யில் இஸ்லாமிய மாணவர்களை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய இந்துத்துவா கும்பல்!

0

உத்திர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய கல்விகற்கும் மதரஸா மாணவர்கள், மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வெறிப்பிடித்த இந்துத்துவா கும்பல் அந்த மாணவர்களை மிரட்டி, ஜெய் ஸ்ரீராம் என்று கூற சொல்லி கிரிக்கெட் மட்டையைக் கொண்டு மண்டையை உடைத்துள்ளனர். மற்றொரு மாணவரின் சைக்கிளும் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதராஸா பள்ளி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர்.

Leave A Reply