உ.பி.யில் கொடூரம்: பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை!

0

உத்தரபிரதேச பார் கவுன்சில் தலைவராக தர்வேஷ் யாதவ் என்ற பெண் சமீபத்தில் தலைவராக பொறுப்பேற்றார். இதையடுத்து தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட தர்வேஷ் யாதவுக்கு ஆக்ரா நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடைபெறும்போது தர்வேஷ் மனிஷ் சர்மா என்னும் வழக்கறிஞர் பார் கவுன்சில் தலைவர் தர்வேஷ் யாதவை குறி வைத்து தூப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் மனிஷ் சர்மா துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் காயம் அடைந்து அவர் உயிருக்கு போராடினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.

Comments are closed.