உ.பி.யில் மிரட்டப்படும் பத்திரிகையாளர்கள்!

0

உ.பி.யில் மிரட்டப்படும் பத்திரிகையாளர்கள்!

ஜூன் 8 அன்று பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை டெல்லியில் வைத்து உத்தர பிரதேச காவல்துறை கைது செய்தது. அவர் செய்த குற்றம்தான் என்ன?

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை அவர் சமூக வலை தளத்தில் பகிர்ந்திருந்தார். ஒரு பெண் அந்த வீடியோ பதிவில், தான் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆதித்யநாத்துடன் வீடியோ கால் உரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், துறவியும், அரசியல்வாதியுமான அவர் தன்னை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறாரா? என்பதை அறிய ஆவலாக உள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த பதிவு வெளியாகி சில மணிநேரங்களில் அந்த பெண்ணின் கருத்துகளை ஒளிபரப்பிய ‘நேசன் லைவ்’ என்ற செய்தி சேனலின் இருவரை உத்தர பிரதேச அரசு கைது செய்தது. இரண்டு தினங்கள் கழித்து சேனலின் செய்தி ஆசிரியர் அன்சுல் கௌசிக்கும் கைது செய்யப்பட்டார்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் (ஐ.பி.சி.) பிரிவு 500 மற்றும் ஐ.டி. சட்டப்பிரிவு 66 ஆகியன கனோஜியாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களாகும். வாழ்க்கை முழுவதும் பிரம்மச்சாரியாக வாழ உறுதிப்பூண்ட துறவியான(?) யோகி ஆதித்யநாத்தின்  நற்பெயரை(?) காப்பாற்றுவதற்கான அதிகாரிகளின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த கைது படலங்கள் நடந்தேறின.

தனக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்ட அந்த பெண்ணின் கருத்துகள் அமையுமானால், அதற்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க எல்லா வகையான சுதந்திரமும் ஆதித்யநாத்திற்கு உண்டு. ஆனால், தனது தனிப்பட்ட புகழை காப்பாற்றுவதற்காக காவல்துறையை ஏவி விடுவது அரசு எந்திரங்களை துஷ்பிரயோகம் செய்வதாகும். ஆட்சியாளரின் நன்மதிப்பை காப்பாற்றுவதற்கான பொது மக்கள் தொடர்பு  துறையாக அரசு எந்திரங்களை ஆதித்யநாத் மாற்றியுள்ளார்.

யோகியின் அதிகார துஷ்பிரயோகம் இத்துடன் முடிந்துவிடவில்லை. அந்த பெண் கூறிய கருத்துகள் தவறாக இருந்தாலும் கூட கனோஜியாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை. ஐ.பி.சி. பிரிவு 500ன்படி அவதூறு பரப்புதல் என்பது ஒரு தீவிரமற்ற பிணையில் விடக்கூடிய குற்றமாகும். அதாவது வாரண்ட் இல்லாமல் காவல்துறையால் இந்த பிரிவின் படி கைது செய்ய முடியாது. மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஆதித்யநாத் புகார் அளித்தால் மட்டுமே கைது செய்ய முடியும். ஆனால் ஆதித்யநாத்தின் புகார் இல்லாமலேயே கனோஜியா கைது செய்யப்பட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக இத்தகைய அதிகார துஷ்பிரயோகம் இந்தியாவில் புதியதொரு செய்தி அல்ல. கருத்து சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகள் இந்தியாவில் மோடி ஆட்சியின் கீழ் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன. ஊடக சுதந்திரம் தொடர்பாக ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகின் 180 நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பட்டியலில் இந்தியா 138-வது இடத்தில் இருக்கிறது. 2017ம் ஆண்டில் 135-வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு மூன்று இடங்கள் பின்னுக்குச் சென்று உள்ளது. பாகிஸ்தானை விட ஒரு ரேங்க் முன்னிலையில் உள்ளோம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.