ஊடகச் சுதந்திரமா ஊடகப் பொறுப்பா – எது முதலில்?

0

ஊடகச் சுதந்திரமா ஊடகப் பொறுப்பா – எது முதலில்?

‘நானக் ஷா ஃபக்கிர்’ என்ற இந்தித் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் சான்றளிக்கப்பட்டுவிட்ட பிறகு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தாக்கல் செய்த அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு படத்தயாரிப்பாளருக்கும் தணிக்கைக்குழுவுக்கும் மத்திய அரசுக்கும் நேரில் வந்து விளக்கமளிக்க ஆணை அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு இதே போன்ற மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றமும், தணிக்கைக்குழு ஒப்புதல் அளித்த படத்திற்குத் தடை விதிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.அப்போது உச்சநீதிமன்றம் கூறிய ஒரு கருத்து எல்லோரும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

“ஒரு கலைஞரின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெளியாட்கள் கட்டுப்படுத்த முடியாது,” என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கலைஞர்கள் மட்டுமல்லாமல், எவரொருவரின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் உயர்வானது. அதே போல் அந்தக் கருத்து வெளிப்பாட்டை விமர்சிக்கிற சுதந்திரமும் உயர்வானது.ஏனென்றால் விமர்சனமும் ஒரு கருத்துதான். ஒரு கருத்தையோ, கலை வெளிப்பாட்டையோ எதிர்கொள்ளும் ஒரே நாகரிகமான வழி விமர்சனச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதுதான். குரு நானக் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அந்தத் திரைப்படத்தில் எந்த அளவுக்கு சரியாகச் சித்தரித்திருக்கிறார்கள், அவர் முன்வைத்த கோட்பாடுகளை எப்படி அடையாளப் படுத்தியிருக்கிறார்கள் என்ற கோணங்களில் அதை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதை விடுத்து, அந்தப் படம் எப்படி வந்திருக்கிறது, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சீக்கியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பார்த்து முடிவு செய்ய விடாமல், அந்தப் படத்தைத் திரையிடவே கூடாது என்று தடை கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது? நானக்கின் வாழ்க்கை நிகழ்வுகளை நடிகர்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்கள், அது சீக்கிய கொள்கைகளுக்குப் புறம்பானது, ஆகவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட கொள்கைகள் பொருத்தம்தானா என்று சீக்கிய நண்பர்களிடம் கேட்கவும் உரையாடவும் விரும்புகிறேன்.

…முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.