ஊடக தர்மமா வியாபாரமா?

0

இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான டைம்ஸ் ஃஆப் இந்தியா தன் பணியாளர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால் ஒருநாளைக்கு குறைந்த பட்சம் மூன்று செய்திகளையாவது வாட்சப்பில் பகிர்ந்திருக்க வேண்டும். மூன்று செய்திகளையாவது தங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்க வேண்டும், அவர்களின் செய்திகள் குறித்த மூன்று டுவீட்களையாவது ட்விட்டரில் பகிர்ந்திருக்க வேண்டும் என்பதே. இது இத்தோடு நில்லாமல் செய்தியாளர்கள் பகிரும் செய்திகளுக்கு கிடைக்கும் லைக், ஷேர், கமண்டுகளுக்கு ஏற்றவாறு அவர்களின் மாத ஊதியமும் தீர்மானிக்கப்படும்.
மக்களின் அறியாமையை போக்கி நாட்டு நடப்புகளை சாமானிய மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஜனநாயகத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான பத்திரிகை துறையில் திணிக்கப்படும் இத்தகைய வியாபார யுக்திகள் மிகவும் மோசமானவை. இது மக்களுக்கு எந்த செய்திகளை தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலை மாறி மக்கள் எந்த செய்திகளை கேட்ட விரும்புவார்கள் என்ற நிலைக்கு செய்தியாளர்களை தள்ளும். இறுதியில் மக்களின் அன்றைய பொதுபுத்திகளுக்கு தீனிபோடும் வகையில் நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்களையோ அல்லது மக்களின் உணர்ச்சியை தூண்டும் செய்திகளையோ பகிரவேண்டிய நிலைக்கு செய்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். ஏற்கனவே கற்பழிப்புகளையும் கள்ளக்காதல் செய்திகளையும் மட்டுமே நம்பி ஓடிக்கொண்டிருக்கும் பத்திரிகளுக்கு மத்தியில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த யுக்தியை அனைத்து செய்தி நிறுவனங்களும் கடைபிடித்தால் செய்தித்துறையே சீர்கெட்டுவிடும்.
இது குறித்து டைம்ஸ் ஃஆப் இந்தியா நிறுவனத்திடம் கருத்துகேட்ட பொழுது அவர்கள் இதனை மறுக்கவும் இல்லை ஆமோதிக்கவும் இல்லை

Comments are closed.