ஊரடங்கு உத்தரவை மீறி நூறறுக்கணக்கானோருடன் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்.எல்.ஏ

0

உலக முழுவதும் கொரோனா நோய் தாக்கி வரும் நிலையில் கவலையின்றி, கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. ஜெயராம் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டடியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளபோது, கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பாஜக எம்.எல்.ஏவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

குறிப்பாக கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டு, சமூக விலகல் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதனால் மத பிரார்த்தனை கூட்டங்களும் கைவிட்டுள்ளது.

ஆபத்தான இந்த சூழ்நிலையில் சட்டங்களை புறந்தள்ளிவிட்டு பாஜக எம்.எல்.ஏ ஜெயராம், நூற்றுக் கணக்கானோரை வரவழைத்து கோலகலமாக தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். மேலும் பாஜக கடை தொண்டர்களுக்கு கோவிலில் உணவும் வழங்கியுள்ளார். சமூக விலகல் கடைபபிடிக்காமல் பாஜக எம்.எல்.ஏ செய்தது தவறு என காவல்துறை தெரிவித்துள்ளது.

அவசர காலக்கட்டத்தில்கூட முக்கிய தேவைகளுக்கு வெளியே செல்லும்போது காவல்துறை பொதுமக்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது மட்டுமின்றி தாக்குதலும் நடத்தி வருவதை சமூக வலதளைங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், ஊரடங்கு உத்தரவை மீறும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை பாதுகாத்துவருவதாக பொதுமக்களின் தெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.