ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு

0

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மீது இஸ்ரேலிய எதிர்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன. இவர் பல இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் இருந்து அன்பளிப்பு (லஞ்சம்) பெற்றுள்ளார் என்றும் அவரோடு அவரது குடும்பமும் இதில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலுக்காக 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் வாங்கப்பட்டத்தில் நெதன்யாஹுவின் தனிப்பட்ட வழக்கறிஞர் தான் நீர்மூழ்கி கப்பல் வாங்கப்பட்ட ஜெர்மானிய நிறுவனத்தின் பிரதிநிதயாக இருந்தார் என்றும் இதில் பெரும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நெதன்யாஹுவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த விசாரணை ஜெருசலேத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை நெதன்யாஹு மறுத்துள்ளதோடு இது எதிர்கட்சிகளின் சதி என்று கூறியுள்ளார். மேலும் இந்த குற்றச்சாட்டுகளை அவரது கட்சியான லிகுத் கட்சியும் எதிர்த்துள்ளது. ஃபிரான்ஸ் போன்ற நாடுகளைப் போல நடப்பு பிரதமரிடம் விசாரணை நடத்துவதை தடை செய்யும் சட்டவரைவை தங்கள் கட்சி கொண்டு வரப் போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Comments are closed.