ஊழல் குற்றச்சாட்டில் பொன்னார்!

0

-நாஞ்சிலான்

குமரி மாவட்டத்தில் மேம்பாலங்கள், சாலைகள் அமைப்பதில் 2000 கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் முகமாக அல்லது மோடி அரசின் முகமாக இருப்பவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன். பா.ஜ.க.வினர் உட்பட இந்துத்துவ அமைப்பினரால் ‘வாழும் காமராஜர்’ என்று போற்றப்படுபவர். இவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கால கட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுமையான வளர்ச்சியடைந்து விடுவதாகவும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலகட்டத்தில் மிகவும் பின் தங்கிய நிலைக்கு சென்று விடுவதாகவும் ஒரு மனநிலையை குமரி மாவட்ட அனைத்து தரப்பு மக்களிடையே பா.ஜ.க.வினர் விதைத்துள்ளனர். சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் கூட பொன்னார் மூலமாக குமரியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக எழுதுகிறார்கள். ஆனால் உண்மை இவர்கள் கூறுவதற்கு முரணாக இருக்கிறது.

பொன்னாரின் தேர்தல் வாக்குறுதிகள்

பொன்னார் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தான் வெற்றிப்பெற்றால் குமரி மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். மாவட்டத்தின் நீண்டகால கனவான வர்த்தகத் துறைமுகம் குளச்சலில் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். ஆனால் அதானி குழுமத்துடன் சேர்ந்து குமரியை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு குமரி மாவட்ட மக்கள் எப்போதுமே கேட்காத சரக்கு பெட்டக மாற்று முனையத்தை இணையத்தில் அமைக்க முயற்சி எடுத்தார். மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக தற்போது மணக்குடி-கோவளம் கடற்கரை கிராமங்களுக்கு இடையே அதனை அமைக்க முயற்சித்து வருகிறார். குமரியில் குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டால் குமரி மாவட்ட மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள். ஆனால் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லாத, குமரி மாவட்ட இயற்கை வளங்களை சுரண்டக்கூடிய திட்டத்தை கொண்டு வருவதில் முனைப்பு காட்டுகிறார்.

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.