ஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

0

தொழிலதிபர் ஒருவருக்கு எதிரான ஊழல் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயன்றதாக தங்களது அதிகாரிகள் இருவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்களுடன் விராஜ் பிரோபைல்ஸ் நிறுவனத்தின் ராஜா கொச்சார் மற்றும் ராகேஷ் திவாரி என்பவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக CBI தெரிவித்துள்ளது.

இந்த அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளின்படி இந்திய வருவாய்த்துறை அதிகாரி விவேக் பத்ரா என்பவருக்கு எதிரான வழக்கு ஒன்றை நீர்த்துப் போகச் செய்ய திவாரி, சிபிஐ யின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் ஸ்ரீவஸ்தவா மற்றும் முன்னாள் சிபிஐ ஆய்வாளர் ரபிந்தர் பிரதான் ஆகியோரின் உதவியை நாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கொச்சாரும் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், திவாரி, கொச்சார் மற்றும் அந்த இரண்டு அதிகாரிகள் கிரிமினல் சதித்திட்டம் செய்தது நிறுவப்பட்டுள்ளது. இதற்கென அந்த அதிகாரிகளுக்கு மூன்று தவனைகளில் ரூபாய் 85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்று இவ்விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொச்சார் திவாரிக்கு கமால் அகமத் என்பவர் மூலம் 20 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது. இவருக்கு இரண்டாம் தவனையாக 15 லட்ச ரூபாய் வழங்கப்படும் போது சிபிஐ அவரை கைது செய்தது. இது தொடர்பாக ஆக்ஸ்ட் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு சோதனை நடத்தியதில் 20 ரோலக்ஸ் கைக் கடிகாரங்கள், 80 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திவாரி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக மேலும் ஒரு 2.86 கோடி ரூபாய் திவாரியிடம் இருந்து சிபிஐ கைப்பற்றியுள்ளது.

Leave A Reply