எகிப்திற்கு துருக்கி நிபந்தனை

0

எகிப்துடன் துருக்கி உறவுகளை மேம்படுத்த வேண்டுமென்றால், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை விடுதலை செய்ய வேண்டுமென்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் துருக்கி அதிபர் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார்.
‘எகிப்திய மக்களில் 52 சதவிகிதத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முர்ஸி. அவரை விடுவிக்க வேண்டும்’ என்று ஈரானில் இருந்து திரும்பும் போது விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் எர்துகான் தெரிவித்தார். ‘எகிப்தில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஏறத்தாழ 3000 மக்களையும் அவர்கள் விடுவிக்க வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபாரான முர்ஸியின் ஆட்சியை 2013ல் இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் மூலம் கைப்பற்றிய இராணுவ தளபதியான அப்துல் ஃபதாஹ் ஸிசி முர்ஸி உள்ளிட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரை சிறையில் அடைத்தார். இதனை எதிர்த்த ஏராளமான பொதுமக்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து எகிப்து மற்றும் துருக்கி இடையேயான உறவுகள் சுமூகமான நிலையில் இல்லை. எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சி இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது.

Comments are closed.