எகிப்தில் சிசி ஆட்சியின் போலீஸ் அராஜகத்தையடுத்து மருத்துவர்கள் மாபெரும் போராட்டம்

0

கெய்ரோ மருத்தவமனையில் சிறய காயத்திற்கு மருத்துவம் பார்க்க இரண்டு போலீசார் சென்றுள்ளனர். காயம்பட்ட போலீசாரை சோத்தித்த மருத்துவர், இது சிரிய காயம் தான் என்றும் இந்த காயத்துக்கு தையல் தேவையில்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அந்த மருத்துவரை பலமாக தாக்கியும் தங்களது துப்பாக்கி கொண்டு மிரட்டியும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிகழ்வு எகிப்து மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) போலீஸ் அராஜகத்திற்கு எதிராக வீதியில் திரண்டனர். ஹோஸ்னி முபாரக் அதிபர் பதவியில் இருந்து இறக்கப்பட்டதும் எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி அதில் இஹ்வானுல் முஸ்லிம் இயக்கத்துடைய முஹம்மது மோர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் ஆட்சியை ராணுவத்தின் பலத்தை கொண்டு கவிழ்த்து அப்தெல் ஃபதாஹ் சிசி தன்னை தானே அதிபராக்கிக் கொண்டார்.

சிசி ஆட்சிக்கு வந்ததும் இஹ்வானுல் முஸ்லிம் இயக்கத்தினர் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான இஹ்வானுல் முஸ்லிம் இயக்கத்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் போலீசாரின் அராஜகம் முபாரக்கின் ஆட்சிக்காலத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அராஜகத்தின் ஒரு படி தான் மருத்துவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வு.

இந்த தாக்குதலை கண்டித்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் Egyptian Medical Syndicate அமைப்பின் அலுவலகம் முன்னர் திரண்டனர். பலர் போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பதாகைகளை வைத்திருந்தனர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஜனவரி 28 ஆம் தேதி நடத்தப்பட்ட மருத்துவர்கள் மீதான இந்த தாக்குதலை அடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பையும் மீறிச் சென்றுவிட்டனர் பாதுகாப்பு படையினர் என்ற கருத்து எகிப்து மக்களிடையே பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இரண்டு காவல்துறையினர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டாலும் எகிப்தில் அதிகம் மதிக்கப்படும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் தண்டிக்கப்படாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று மருத்துவர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினாலோ எங்கள் கழுத்தில் கைதி வைத்திருந்தாலோ எங்களால் எப்படி மருத்துவம் செய்ய இயலும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவர்கள் மீது இனி எங்கு தாக்குதல்கள் நடத்தபட்டாலும் அப்பகுதி மருத்துவமனைகள் மூடப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மருத்துவர்களின் இந்த போராட்டத்தை குறித்து அரசு தரப்பு, இவர்கள் இஹ்வானுல் முஸ்லிம்மீன் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்றும் அதனால் தான் அரசுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

Comments are closed.