எகிப்து:இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவருக்கு மரண தண்டனை!

0

எகிப்து: எகிப்தில் விசாரணை நடைபெற்று வரும் வழக்குகளில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவருக்கும் ஏனைய 21 நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 2013ல் நடைபெற்ற கலவரத்தின் போது கலவரக்காரர்களை வழிநடத்தியதாக இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர் முகம்மது பதீய் மற்றும் 13 உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இயக்க முக்கிய தலைவர்களான மஹ்மூத் கோஸ்லான்,சஅத் அல் ஹூஸைனி, ஸலாஹ் சுல்தான் மற்றும் ஃபத்ஹி ஷிஹாப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் சட்டத்தின் பிரகாரம் அனைத்து மரண தண்டனை தீர்ப்புகளையும் அந்நாட்டின் தலைமை முஃப்தி உறுதி செய்ய வேண்டும்.அதன் அடிப்படையில் இந்த தீர்ப்பும் தலைமை முஃப்தியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவரின் முடிவுக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம்.

இதற்கு முன்னரும் பல வழக்குகளில் முகம்மது பதீயிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.ஆனால் அவை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டன.கடந்த ஒன்றரை வருடங்களில் ஏராளமான இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.