எகிப்து அதிபர் முர்ஸியின் மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்

0

எகிப்தின் உயர்ந்த நீதிமன்றங்களுள் ஒன்றான கஸ்சாஷன் நீதிமன்றம் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான முஹம்மத் முர்ஸியின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. இத்துடன் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மேலும் ஐந்து பேரின் ஆயுள்தண்டனையும் அந்த நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

எகிப்தின் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை மக்கள் புரட்சியின் மூலம் வீழ்த்திய பின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசின் அதிபாராக ஏறத்தாள ஒரு வருடம் பணியாற்றினார் முஹம்மத் முர்ஸி. ஆனால் அதன் பின் எகிப்து இராணுவ தளபதியான அப்தெல் ஃபதாஹ் சிசி இராணுவ புரட்சி மூலம் முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்து தன்னை அதிபராக முடி சூட்டிக்கொண்டார். இதனை தொடர்ந்து இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் பல தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வந்தனர். இந்நிலையில் அதிபர் முர்ஸி 2011 புரட்சியின் போது சிறையை உடைத்து கைதிகளை விடுவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து எகிப்து நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை வழங்கியது.

ஆனால் முர்ஸி போன்ற உயர்மட்ட இஹவானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரை கொலை செய்வது புதிதாக வன்முறையை தூண்டும் என்று பலராலும் கருதப்பட்டது. தற்போது கஸ்சாஷன் நீதிமன்றம் முர்ஸியின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது குறித்து கருத்து தெரிவித்த எகிப்து நீதித்துறை அமைச்சர் காலித் நஷர் “கஸ்சாஷன்  நீதிமன்றத்தின் பணி சட்டம் கடைபிடிக்கப்படுகிறதா என்பது தான்” என்றும் “இவ்வழக்கில் நீதிமன்றம் எது சரி என்று கருதுகிறதோ அந்த தீர்ப்பை அளிக்கும்” என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அமெரிக்காவை மையமாக கொண்ட சிந்தனையாளர் ஹச்.ஏ.ஹெல்யர் கூறுகையில், கஸ்சாஷன் நீதிமன்றம் முர்ஸிக்கு மரண தண்டனையே அளித்தாலும் அது உடனடியாக நிறைவேற்றப்பட்டிருக்காது என்று கூறியுள்ளார். 2013 ஆம் ஆண்டு சிசி தலைமையிலான ஆரசு இராணுவப் புரட்சி மேற்கொண்ட போது ஏறத்தாள 1000 பேரை கொலை செய்தனர். தற்போது அதிபர் முர்ஸியை கொலை செய்தால் அது மிகப்பெரிய வன்முறைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். மேலும் எகிப்திய ஆட்சியாளர்கள் மடையர்கள் தான் ஆனால் முர்ஸியை கொல்லும் அளவிற்கு மடையர்கள் அல்ல, அனாலும் அவர்கள் முர்ஸியை எளிதில் வெளியில் விடப்போவதும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.