எகிப்து அருகே 300 அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து 29 பேர் பலி

0

எகிப்து கைரோவில் இருந்து  140 கிலோமீட்டர் தூரத்தில் ஏறத்தாள 300 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த படகில் எகிப்து, சிரியா, மற்றும் ஆப்ரிக்காவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை யாற்றிச் சென்றது என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதகாவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 10 பெண்கள், 18 ஆண்கள், மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மற்றொரு செய்தி தெரிவித்துள்ளது.

மீட்புப் படையினர் இதுவரை 150  பேரை காப்பாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னும் வேறு எவரேனும் உயிருடன் உள்ளனரா என்றும் தேடி வருகின்றனர்.

அகதிகளை ஏற்றிச்சென்ற இந்தப் படகு எங்கு சென்றது என்பதற்கான தகவல் ஏதும் இல்லை.

 

Comments are closed.