எகிப்து: இஃவானுல் முஸ்லிமீனின் மூத்த உறுப்பினர் ஃபரீத் இஸ்மாயில் சிறையில் மரணம்

0

இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான ஃபரீத் இஸ்மாயில் சிறையில் வைத்து மரணமடைந்தார்.அதிகாரிகள் அவருக்கு போதிய சிகிட்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக ஃபரீத் இஸ்மாயில் உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், அவர் இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன் கிழமை (ஏப்ரல் 13) மரணமடைந்துள்ளார்.
ஃபரீத் இஸ்மாயில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவான ஃபிரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்ட்டியின் செயற்குழு உறுப்பினராவார். அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.