எகிப்து: காவல்துறை அதிகாரிக்கு 15 ஆண்டுகள் சிறை

0

எகிப்தில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்ட பெண் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிக்கு அந்நாட்டின் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. காவல்துறையால் சுடப்பட்ட ஷைமா அல் ஸபாக் பின்னர் மரணமடைந்தார்.
2011 தஹ்ரீர் சதுக்கத்தில் கொலை செய்யப்பட்டவர்களை நினைவு படுத்தும் விதமாக ஜனவரி மாதம் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 34 வயதான ஷைமா துப்பாக்கியால் சுடப்பட்டார். இச்சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இச்செயலில் ஈடுபட்டவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று சொல்லும் நிலைக்கு தற்போதைய அதிபர் அப்துல் ஃபதாஹ் ஸிஸி தள்ளப்பட்டார்.
இவரின் ஆட்சியில் காவல்துறையை சேர்ந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படுவது இது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது கொலை குற்றம் சுமத்தப்படவில்லை. வேண்டுமென்றே ஆர்ப்பாட்டக்காரர்களை காயப்படுத்துவது என்றே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு காவல்துறை அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.