எகிப்து முஃப்தி முர்ஸியின் மரண தண்டனையை உறுதி செய்தார்

0

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு தன்னைத்தானே ஜனாதிபதியாக்கிக் கொண்டார் ராணுவ தளபதி சிசி. அவர் ஆட்சி பொறுப்பேற்றதும் நாடு முழுவதிலும் உள்ள இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர்கள் கைது செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் வந்தனர். அந்த வகையில் ஜனாதிபதி முர்ஸிக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இந்த மரண தண்டனை எகிப்து முஃப்தி டாக்டர் ஷாவ்கி அல்லாம்மின் உத்தரவுக்காக காத்திருந்தது நீதிமன்றம். தற்பொழுது அவர் முர்ஸியின் மரண தண்டனைக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எகிப்தின் சட்டத்தின் படி அனைத்து மரண தண்டனைகளுக்கும் எகிப்தின் முஃப்தி ஒப்புதல் வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் முஹம்மத் முர்ஸி உட்பட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் தலைவர்களான இஸ்ஸாம் அல்-இர்யான், சாத் அல்-கடாட்னி ஆகியோர் உள்ளிட்ட இன்னும் பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது எகிப்து நீதிமன்றம்.

Comments are closed.