எகிப்து: முன்னாள் அதிபர் முர்ஸிக்கு மரண தண்டனை!

1

எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு மரண தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 2011ல் எகிப்தில் அப்போதைய அதிபர் முபாரக்கிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற போது அதை பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பியதாக முர்ஸி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மேலும் 105 நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மற்றுமொரு வழக்கிலும் பதினாறு நபர்களுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனைகளை நாட்டின் முஃப்தி உறுதி செய்ய வேண்டும். முஃப்தியின் ஒப்புதல் இல்லாவிட்டாலும் மரண தண்டனையை நிறைவேற்ற இயலும். ஜூன் 2ல் இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 2012ல் இஹ்வானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்கள் மற்றும் எதிரணியினரிடையே ஏற்பட்ட மோதல் வழக்கில் முர்ஸிக்கு ஏப்ரல் 21 அன்று இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர இன்னும் சில வழக்குகளும் முர்ஸி மீது உள்ளன.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முர்ஸியின் ஆட்சி 2013ல் கவிழ்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏராளமான இஹ்வானுல் முஸ்லிமீன் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் மீது தற்போதைய இராணுவ அரசு மரண தண்டனை விதித்து வருகிறது. இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர் முஹம்மது பதீய்க்கும் ஒரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Discussion1 Comment

  1. மதுரை முஹம்மத் ஹபீஸ்,அபுதாபி, UAE

    இந்த உலக லாபத்திற்காக இறைநிராகரிப்பாளர்களுடனும்,காபிர்களுடனும் இணைந்து இஸ்லாமிய புரட்சியை ஒடுக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள் அடக்குமமுறைகளுக்கு மத்தியில்தான் இஸ்லாம் வேகமாக வளர்ந்ததை ஏன் மறந்தார்கள் இந்த மதிகெட்ட ஆட்சியாளர்கள்?( அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 9:32.)