இராணுவ புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது சிறையில் உள்ள எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியின் மகனை வன்முறையை தூண்டியதாக கூறி எகிப்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
முர்ஸியின் ஐந்து மக்களில் ஒசாமா என்பவரை நைல் டெல்டா பகுதியில் உள்ள ஷர்கியா என்ற இடத்தில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அல்-மஸ்ர் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.
கடந்த திங்கள் கிழமை முர்ஸியின் குடும்பத்தினர் ஐக்கிய நாடுகள் சபையிடம் எகிப்திய அரசால் முர்ஸிக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். கடந்த 2013 இல் இருந்து முர்ஸியை அவரது குடும்பத்தினர் சந்திப்பதை எகிப்திய அரசு தடுத்து வருகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எகிப்திய ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இராணுவ புரட்சியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது போராட்டக்காரர்களை கொலை செய்தார் என்றும் கத்தார் நாட்டிற்காக உளவு பார்த்தார் குற்றம் சாட்டியுள்ளது எகிப்து அரசு.