எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது முர்சி நீதிமன்றத்தில் உயிரிழந்தார்!

0

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது முர்சி. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹுஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியை கைப்பற்றினார் முர்சி. ஆனால், அவரால் ஓராண்டுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியவில்லை.

கடந்த 2013ஆம் ஆண்டு அதிபர் மாளிகைக்கு வெளியே தீவிரமான மோதலில் ஈடுபட்ட காரணத்திற்காக எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி, முர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையில் வைத்தார். அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து பதவி பறிக்கப்பட்ட இஸ்லாமிய தலைவரான முர்சிக்கு எதிராக அரசு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனையை வழங்கப்பட்டது.

மற்றொரு வழக்கு விசாரணைக்கான நீதிமன்றத்தில் ஆஜரானபோது, திடீரென மயங்கி விழுந்த முர்சி நீதிமன்றத்திலேயே உயிரிழந்தார்.

Comments are closed.