எகிப்து: முன்னாள் அதிபர் முர்ஸிக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனை

1

 

எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது முர்ஸிக்கு ஒரு வழக்கில் இருபது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரான முர்ஸிக்கு எதிராக வெளிவந்திருக்கும் முதல் தீர்ப்பு இது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முர்ஸி ஜூலை 2013ல் நடைபெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து முர்ஸி உள்ளிட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை இராணுவ அரசாங்கம் பதிவு செய்துள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் தடை செய்யப்பட்டது.

2011 மக்கள் எழுச்சியின் போது சிறையில் இருந்து தப்பியது, உளவு பார்த்தது, நாட்டுக்கு எதிராக செயல்பட்டது என ஏராளமான வழக்குகள் முர்ஸி மீது போடப்பட்டன. டிசம்பர் 2012ல் முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர் முஹம்மது பதீய் உள்ளிட்ட 14 நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஏப்ரல் 20 அன்று வழங்கப்பட்ட மற்றொரு தீர்ப்பில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை சேர்ந்த 22 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஜனநாயகம் மற்றும் நீதித்துறையை கேலிக்கூத்தாக மாற்றி வரும் தற்போதைய அதிபர் அப்துல் ஃபதாஹ் சிசியின் போக்கை சர்வதேச சமூகம் வன்மையாக கண்டித்துள்ளது.

Discussion1 Comment

  1. எகிப்தின் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கை பிரௌனை நியாபக படுத்துகிறது