எகிப்து: ரபா அதவியா சதுக்கத்தின் பெயரை மாற்ற அரசு முடிவு

0

எகிப்தில் உள்ள ரபா அதவியா சதுக்கத்தின் பெயரை மாற்றுவதற்கு எகிப்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜூன் 29 அன்று குண்டுவெடிப்பு ஒன்றில் பலியான அரசு தரப்பு வழக்கறிஞர் ஹிஷாம் பராகத்தின் பெயரை இச்சதுக்கத்திற்கு சூட்டுவதற்கு இராணுவ அரசு முடிவு செய்துள்ளது.
எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மது முர்ஸி சட்டவிரோதமாக பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இச்சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ரபா அதவியா மற்றும் அந்நஹ்தா சதுக்கங்களில் காவல்துறை மற்றும் இராணுவம் நுழைவதற்கு ஹிஷாம் ஒப்புதல் வழங்கினார். இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆகஸ்ட் 14, 2013 அன்று இச்சதுக்கங்களில் படுகொலை செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் வழக்கை கிரிமினல் நீதிமன்றங்களில் விசாரிக்கவும் ஹிஷாம் ஒப்புதல் வழங்கினார். வரலாற்று சிறப்பு மிக்க சதுக்கத்தின் பெயரை மாற்றுவதற்கு எகிப்து அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Comments are closed.