எகிப்து: 22 நபர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம்

0

இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஆதரவாளர்கள் 22 நபர்களுக்கான மரண தண்டனையை எகிப்து நாட்டின் உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. ஜூலை 2013ல் காவல் நிலையம் மீதான தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எட்டு நபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுவர் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக வழக்கிறஞர்கள் தெரிவித்துள்ளனர். எகிப்தில் முஹம்மது முர்ஸியின் அரசாங்கம் இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான இஹ்வானுல் முஸ்லிமீன் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க தலைவர் முஹம்மது பதீய் மற்றும் 13 நபர்களுக்கு மார்ச் மாதம் ஒரு வழக்கில் மரண் தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.