எங்கே எனது வேலை?

0

எங்கே எனது வேலை?

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு புதிதாக ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’’ என்று சூளுரைத்தார். இது போன்ற காதுகளை குளிரச் செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கும் வந்தது. தற்போது அதன் ஐந்தாண்டுகால ஆட்சி முடியும் நிலையில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிபரம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த புள்ளிவிபரம் வெளியே வரக் கூடாது என்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிகளை எடுத்தது என்ற செய்தி அதைவிட அதிக அதிர்ச்சியை கொடுத்தது.

ஜூலை 2017&- ஜூன் 2018 காலகட்டத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்ற அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத இந்த புள்ளிவிபரம் வெளியே வருவதற்கு முன் மற்றொரு செய்தி சிறு பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 28 அன்று தேசிய புள்ளியியல் கமிஷனின் (National Statistical Commission) பி.சி.மோகனன் மற்றும் ஜே.வி.மீனாட்சி ஆகிய இரண்டு உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவரின் பதவிக் காலம் ஜூன் 2020 வரை உள்ளது. இந்தியாவின் புள்ளியியல் நடைமுறைகளை மறுஆய்வு செய்த ரங்கராஜன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தேசிய புள்ளியியல் கமிஷனை ஜூன் 1, 2005 அன்று அரசாங்கம் அமைத்தது. புள்ளியியல் விவகாரங்களில் கொள்கைகள் வகுப்பதற்கும் முக்கியத்துவம் வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய புள்ளியியல் கமிஷன் ஜூலை 12, 2006ல் நடைமுறைக்கு வந்தது. புள்ளியியல் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட நான்கு உறுப்பினர்கள் மற்றும் ஒரு தலைவரை இந்த கமிஷன் கொண்டுள்ளது. இவர்கள் தவிர அரசாங்கம் தரப்பில் இருவரும் இதில் உறுப்பினர்களாக இருப்பர்.

ஏற்கெனவே இந்த கமிஷனின் இரு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்கான இடங்கள் காலியாக உள்ளதையும் மோகனன் தற்காலிக தலைவராக செயல்பட்டு வந்ததையும் அதன் இணையதளம் குறிப்பிடுகிறது. மோகன் மற்றும் மீனாட்சி ஆகியோரின் ராஜினாமாவை தொடர்ந்து தற்போது கமிஷனின் அனைத்து பதவிகளும் காலியாக உள்ளன. அரசு தரப்பில் மூத்த புள்ளியியளாளரான பிரவீன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிதி ஆயோக்கின் அமிதாப் கன்த் ஆகியோர் மட்டுமே இதன் உறுப்பினர்களாக தற்போது எஞ்சி உள்ளனர். நாட்டின் புள்ளியியல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பான இந்த ஆலோசனை குழுவை சீர்குலைத்த பெருமை பா.ஜ.க. அரசை சாரும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.