எட்டு மாதங்களில் 1800 கோடி! குறைந்தபட்ச தொகை வைக்காததால் SBIக்கு வருமானம்

0

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி கட்டமைப்பை கொண்ட அரசு வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி (SBI) திகழ்கிறது. கடந்த 2017 ஏப்ரல் 1 இல் தனது வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச வங்கி இருப்பு தொகை இருக்க வேண்டும் என்ற நிர்ணய சட்டத்தை வங்கி மேற்கொண்டது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு பிறகு நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் குறிபிட்ட தொகை கட்டாயம் இருத்தல் வேண்டும் என்று புதிய விதிகளை பிறப்பித்தது. இந்த குறைந்தபட்ச தொகை அளவு முன்பிருந்த அளவை காட்டிலும் சற்று கூடுதல் என்று பல்வேறு தளத்தில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இருந்தபோதிலும் அமல்படுத்தும் தேதி மாற்றியமைக்கபட்டதே தவிர வேறு எந்த மாற்றமும் செய்ய்பட்டவில்லை.

அதன் அடிப்படையில் நகர்புற வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர் தங்களது கணக்கில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3000 ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோன்று கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் 1000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்போடு பணபரிமாற்ற சேவை தொகையும் அதிகரிக்கபட்டது.

இந்த புதிய விதியின்படி குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு கிழ் செல்லும் கணக்கில் இருந்து அபராதம் வசூல் செய்யப்படும். இதனால் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு கீழ் செல்லும் சேமிப்பு கணக்கில் அபராத தொகையை தானாக பிடித்துக்கொண்டது. இதுபோன்று நாட்டில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து வசூலித்த அபராத தொகை எவ்வளவு என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது.

இதன் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் கடந்த 2017 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 1,772 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் நாடு முழுவதும் சுமார் 40.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களின் வங்கியில் இருந்து பிடிக்கபட்ட அபராத தொகை மட்டும் தான் இது. இந்த தொகையானது அந்த காலகட்டத்தின் வங்கியின் இரண்டாவது காலாண்டின் மொத்த வருமானத்தை விட இது சற்று கூடுதல்.

இதேபோன்று நாட்டின் மற்றொரு பெரிய பொதுவங்கியான பஞ்சாப் தேசிய வங்கி 97.34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பிற வங்கிகளான சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, கனரா வங்கி ஆகியவை தலா 50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த குறைந்தபட்ச இருப்பு தொகை விதி பிரதமர் மக்கள் நிதி திட்டம், அரசு ஓய்வுதியம் பெறுபவர்கள், சிறுவர்கள் கணக்கு மற்றும் பிற சமூக பயனாளிகள் கணக்குகள் இதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Comments are closed.