எட்டு வயது குழந்தையை வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் காஷ்மீர் மாநில காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளது – கிரைம் பிரான்ச் அதிகாரிகள் குற்றச்சாட்டு

0

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் மாநிலம் கந்துவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி காவல்துறை அதிகாரி கஜூரியா என்பவனால் கடத்திச்செல்லப்பட்டு பின்னல் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார் . இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்த அவரையே பின்னர் காவல்துறை ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்தது. பின்னர் குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்து ஏக்தா மன்ச் போன்ற அமைப்புகள் போராட்டம் நடத்தின. (பார்க்க செய்தி)

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் கிரைம் பிரான்ச் அதிகாரிகள் மாவட்ட காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு அது தடயவியல் துறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னதாக சிறுமியின் உடையில் இருந்த இரத்தம், களிமண் தூசுகள் ஆகியவை சுத்தமாக கழுவப்பட்டு இருந்ததாக கூடுதல் விசாரணையில் உறுதியாகியுள்ளது. மேலும் அந்த சிறுமியின் பெற்றோர்கள் வழக்கு பதிவு செய்யும் வரை உடலை மறைத்து வைத்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரைம் பிரிவு விசாரணை அதிகாரிகள் தங்களுடைய அறிக்கையை கடந்த வெள்ளியன்று காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அதிகாரிகள் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தண்டிக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. வாயித் தெரிவித்துள்ளார்.

Comments are closed.