எட்டு வழி சாலை நிறைவேற்றப்படும்: நிதின் கட்கரி!

0

தமிழகத்தில் 8 வழிச்சாலைக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதில்லை என்றும், தீர்ப்பை அமல்படுத்த ஒத்துழைக்க போவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசினார்.

ஆனால், இந்திலையில் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் முன்னிலையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ‘8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகளின் தேவையை நிறைவேற்றிய பின்னர் செயல்படுத்துவோம் என்றும், நிலம் கைப்படுத்துவதற்கு நாங்கள் வழக்கத்தை விட தொகையை அதிகளவில் உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த 8 வழி சாலை திட்டம் நிறைவேற்றுவதற்கு எடப்பாடியும், நானும் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார்.

Comments are closed.