எதற்கும் கலங்காமல் ஒரு மரம் போல நிற்கப் பழகுவோம்!

0

எதற்கும் கலங்காமல் ஒரு மரம் போல நிற்கப் பழகுவோம்!

-கே.ஆர்.மஹ்ளரி

முன்னொரு காலத்தில் ஒரு தச்சன் இருந்தான். அவன் வனத்தில், தான் வெட்ட விரும்பும் மரத்திடம் சென்று, ‘உன்னை வெட்ட என்னை அனுமதிப்பாயா?’ என்றும், தான் அம்மரத்தில் என்ன பொருள் செய்யப்போகிறேன் என்பதையும் தெரிவிப்பான். சம்மதித்தால் மட்டுமே அதை வெட்டுவான். இல்லையெனில் விட்டுவிடுவான்.

இவ்வாறு ஒருமுறை கருங்காலி மரத்திடம் சென்று, ‘நீ மூப்படைந்து விட்டாய். உன்னை வெட்டி ஒரு மேஜை செய்யப்போகிறேன்’ என்றான்.

அதற்கு அந்த மரம், ‘இலைகளை உதிர்த்துவிட்டு மொட்டையாக நிற்கிறேன். மழைக்காலம் துவங்கப்போகிறது. மழையின் குளுமையால் புத்துணர்வுபெற விரும்புகிறேன். எனவே, மழைக்காலம் முடிந்த பிறகு வா’ என்றது.

தச்சனும் சரி என்றான். மழைக்காலம் முடியும் வரை காத்திருந்தான். மழைபெய்த பிறகு வனத்தின் தோற்றமே மாறியிருந்தது. ‘இப்போது உன்னை நான் வெட்டலாமா?’ என்று கேட்டான். அதற்கு அந்த மரம், ‘குளிர்காலப் பனியை நான் அனுபவிக்க விரும்புகிறேன். எனவே குளிர்காலம் முடிந்தபிறகு வா’ என்றது. அவனும் சரி என்றான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.