எந்த காரணமுமின்றி திகார் சிறையில் 18 முஸ்லிம்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்

0

கடந்த நவம்பர் 21 ஆம் தேதி திகார் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகள் மீது சிறை அதிகாரிகளின் மிருகத்தனமான தாக்குதல் குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்திருந்தது.

மூன்று நபர் குழுவான இந்த குழுவின் விசாரணையில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தமிழ்நாடு சிறப்பு காவல்துறை(TSP) மற்றும் QRT எனும் விரைவு நடவடிக்கை குழு ஆகியவை எந்த ஒரு நியாயமான காரணங்கள் எதுவும் இன்றி சிறையில் உள்ள 18 முஸ்லிம் கைதிகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

திகார் சிறையில் NIA வால் விசாரிக்கப்பட்டு வரும் விசாரணை கைதியாக உள்ள செய்யத் யூசுஃப் என்பவரால் அளிக்கப்பட மனுவின் பேரில் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி C.ஹரி ஷங்கர் ஆகியோரால் இந்த விசாணை குழு நியமிக்கப்பட்டது. யூசுஃப் தனது மனுவில், சிறை அதிகாரிகள் எந்தவித காரணமும் இன்றி சிறைக்கைதிகள் சிலரை கடந்த நவம்பர் 21 ஆம் தேதி கடுமையாக தாக்கியதாக குறிப்பிட்திருந்தார்.

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்திய கூட்டுப் பதிவாளர் ரீதீஷ் சிங், பதிவாளர் லாரென் பம்னியல் மற்றும் வழக்கறிஞர் ஹர்ஷ் பிரபாகர் ஆகியோர் சிறையின் CCTV காட்சிகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தத் தாக்குதில் காயமடைந்த அனைத்து கைதிகளும் சிறை எண் ஒன்றில் உள்ள உயர் பாதுகாப்பு பிரவு C மற்றும் F ஆகியவற்றில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டிக்கப்பட்டவர்கள்.

குறிப்பிட்ட இந்த தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை சிறை அறையை சோதனையிட்ட போது சிறை கைதிகளின் தலையணை உரைகளை பிடுங்கியதில் தொடங்கியுள்ளது என்று திகார் கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ராஜ் குமார் கூறியுள்ளார். அனைவரின் தலையணை உரைகளும் அகற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க சிறை கைதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்படவே சில காவல்துறையினர் அபாய எச்சரிக்கையை எழுபியுள்ளனர். அதனால் அங்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இருந்து மேலும் சிலர் அங்கு சென்று அங்குள்ள சிறைக் கைத்களை மிருகத்தனமாக தாக்கியுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு இந்த தாக்குதல் QRT ஐ சேர்ந்த காவலர்களால் தொடரப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து விசாரித்த விசாரணை குழு, குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளின் இந்த தாக்குதலை நியாப்படுத்த எதுவும் இல்லை என்றும் இவர்களின் இந்த செயல் அடிப்படை மனித உரிமை மீறல் மற்றும் சட்ட உரிமை மீறல் என்று கூறியுள்ளனர். மேலும் தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் அபாய எச்சரிக்கையை எழுப்பவும் அப்போது எந்த காரணமும் இருக்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. டில்லி சிறை வழிகாட்டு விதிகளின்படி, சிறைக் கைதியை காணவில்லை என்றாலோ, சிறையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலோ, சிறைக்கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட முயற்சிகள் செய்தாலோ தான் அபாய ஏச்சரிக்கை ஒலிக்கப்பட வேண்டும். ஆனால் தங்கள் விசாரணையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது.

சிறைக்கைதிகள் தங்களின் தலையணை உரைகள் அகற்றபப்டுவதற்கு மட்டுமே மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் அவர்கள் தங்களின் சப்தத்தை உயர்த்தினார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்ப அது காரணமாகிவிட முடியாது என்று அக்குழு கூறியுள்ளது. மேலும் இந்த நிலைமையை மொழி பிரச்சனை மேலும் அதிகரித்துவிட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ள தமிழ்நாட்டு காவலர்கள் அங்குள்ள சிறை அதிகாரிகளிடம் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.

இத்துடன் “இச்சம்பவம் நடைபெற்ற சிறைப் பிரிவில் உள்ள கைதிகள் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் சிறை அதிகாரிகளால் கொலை செய்யப்படலாம் என்கிற அச்சத்திலேயே எப்போதும் உள்ளனர்” என்றும் அவர்கள் ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டு கொலை செய்யப்படலாம் என்று கருதுவதாகவும் தங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் நேராது என்ற உத்திரவாதத்தை அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

யுசுஃப் அளித்த மனுவுடன் வழக்கறிஞர் ஜவஹர் ராஜா என்பவர் சிறை அதிகாரிகளால் கஷ்மீரி முஸ்லிம்கள் அவ்வப்போது குறிவைக்கப்படுகின்றனர் என்று மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் People’s Union for Democratic Rihgts என்கிற அமைப்பு மூலம் முன்னரும் எழுப்பப்பட்டுள்ளது.

இன்னும் ஜம்மு கஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, கடந்த நவம்பர் 28 ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா விடம் திகார் சிறையில் கஷ்மீரிகள் துன்புறுத்தப்படுவது குறித்து அடிக்கடி வரும் புகார்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். அது தொடர்பாக தான் விசாரிப்பதாக முஃப்திதிடம் கெளபா உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

சிறையில் தாக்கப்பட்ட சிறைவாசிகள் சிலரின் புகைப்படங்கள்:

Comments are closed.