எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக விற்கு வாகுகளை அள்ளிக் குவிக்கும் மின்னணு வாக்கு எந்திரம்

0

மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் உத்திர பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் மின்னணு வாக்கு எதிரங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் ஆளும் பாஜக விற்கு வாக்குகளை செலுத்துவதாக பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. இதில் மீரட்டில் உள்ள வார்ட் எண் 89 இல் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜக சின்னத்திற்கு வாக்குகள் விழுந்தது பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடக்க இருந்த உத்திர பிரதேசத்தின் உள்ளாட்சித் தேர்தல் கடந்த புதன் கிழமை துவங்கியது. இந்த தேர்தலின் முதல் கட்டத்தில் 24 மாவட்டங்களில் உள்ளவர்கள் வாக்களித்தனர். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் நடக்கும் இந்த தேர்தல் பாஜக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கை குறித்த சோதனையாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் தான் மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாக வாக்களித்தவர்கள் புகாரளித்துள்ளனர்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த மாநில கூடுதல் தேர்தல் ஆணையர் வேத பிரகாஷ் வர்மா, இது பொய்யான தகவல் என்று கூறியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்றின் படி பழுதடைந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் உடனே மாற்றப்பட்டுள்ளன என்று மீரட் கூடுதல் மாவட்ட நீதிபதி முகேஷ் குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியில், ஒரு இளைஞர் தான் பஹுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்த போது அந்த வாக்கு பாஜக விற்கு செல்வதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து தஸ்லீம் அஹமத் என்ற அந்த இளைஞர் கூறுகையில், “நான் BSP க்கு எனது வாக்கை அளித்தேன். மேலும் அந்த பட்டனை நான் அழுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் எனது வாக்கை இந்த எந்திரம் பாஜகவுற்கு செலுத்தியதாக காட்டுகிறது. நான் இங்கு ஒரு மணி நேரம் காத்திருக்கின்றேன். ஆனால் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பாஜக விற்கு ஆதரவாக வாக்குகளை செலுத்துமாறு முறை கேடு செய்யப்பட்டவை என்று BSP குற்றம் சாட்டியுள்ளது.

மீரட்டின் தவாய் நகர் பகுதியில் இதே போன்று BSP வாக்கு செலுத்திய போது NOTA மற்றும் பாஜக சின்னங்களில் LED எறிந்ததாக கூறப்பட்டுள்ளது. இதே போன்ற கான்பூரின் 58வது வார்டிலும் திவாரிபூரின் 104வது வார்டிலும் புகார்கள் எழுந்துள்ளன.

பல இடங்களில் மின்னணு வாக்கு எந்திரங்களில் சிறிய கோளறு ஏற்பட்டதாகவும் ஆனால் சில நேரங்களில் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் துவங்கியது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கான்பூரின் மணி ராம் பாகியா இடத்தில் உள்ள மூன்று வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு இருந்ததாகவும் அவை உடனே சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு மீண்டும் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆக்ராவில் உள்ள வாக்குச் சாவடி என் 606லும் மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனால் வாக்குப்பதிவு தாமதமானது என்றும் இது பல வாக்காளர்களை கோபமூட்டியது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 52%மேலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கூறபப்டும் அமேதி தொகுதியில் 68.44% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதே வேலை உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யனாதின் சொந்த தொகுதியான கோரக்பூரில் மிகக் குறைவாக 39.23% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Comments are closed.