என்கௌண்டர்களில் சிக்கும் அப்பாவிகள்

0

என்கௌண்டர்கள், மோதல்கள், படுகொலைகள், மரண ஊர்வலங்கள், கடை அடைப்புகள், சொத்துகள் இழப்பு என தெற்கு கஷ்மீரின் நிலைமை மோசமாக உள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு படையின் (ழிணீtவீஷீஸீணீறீ ஷிமீநீuக்ஷீவீtஹ் நிuணீக்ஷீபீs) கறுப்பு பூனை கமாண்டோகளை மாநிலத்தில் நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கம் உத்தேசித்து வருகிறது. கஷ்மீர் பள்ளத்தாக்கில் என்கௌண்டர் நடைபெறும் இடங்களில் உள்ள நிலையை கட்டுக்குள் வைப்பது இவர்களின் முக்கிய பணியாக இருக்கும். என்கௌண்டர் நடைபெறும் இடங்களுக்கு மக்கள் கூட்டமாக சென்று பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடும் ஒரு புதிய சூழல் சமீபத்தில் கஷ்மீரில் உருவாகியுள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் போராளிகள் இடையே துப்பாக்கி சூடு நடைபெறும் சமயத்தில் என்கௌண்டர் இடத்தை நோக்கி அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் செல்லும் சூழலில் அவர்களில் ஏராளமானவர்கள் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். என்கௌண்டர்கள் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தெற்கு கஷ்மீரில் அதிகரித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோகளை நிறுத்த மத்திய அரசு உத்தேசித்துள்ளது. கஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த கமாண்டோகளை நிறுத்துவதற்கான கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. 1984ல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் நடைபெற்ற ஆபரேஷன் புளு ஸ்டாரின் போது உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு படை 26&11 மும்பை தாக்குதல், குஜராத் அக்ஷர்தம் கோயில் தாக்குதல் மற்றும் பதான்கோட் விமான தளம் மீதான தாக்குதல் (ஜனவரி 2016) ஆகியவற்றின் போது தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

ஒரு கிராமம் அல்லது நகரத்தை முழுமையாக பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் சுற்றி வளைத்து அனைத்து வீடுகளை சோதனையிடும் வழக்கம் 2017ல் மீண்டும் திரும்பியது. 1990களின் ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்த இந்த முறை சிஷீக்ஷீபீஷீஸீ ணீஸீபீ ஷிமீணீக்ஷீநீலீ ளிஜீமீக்ஷீணீtவீஷீஸீs (சிகிஷிளி) என்று அழைக்கப்பட்டது. முன்னர் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது குறிப்பிட்ட பகுதியின் ஆண்கள் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, ஒரு பகுதியில் ஒன்று கூட்டப்பட்டனர். அதன் பின் இவர்கள் அனைவரும் முகத்தை மறைத்த இன்ஃபார்மர் முன் அணிவகுத்து செல்ல வேண்டும். இத்தகைய தேடுதல் வேட்டை அதிகரிப்பது ஆபத்தானது மட்டுமின்றி கடந்த காலத்தை நோக்கி செல்வதாகவும் உள்ளது என்று உள்ளூர் மனித உரிமை அமைப்பான ஜம்மு கஷ்மீர் சிவில் சமூகங்களின் கூட்டமைப்பு தன்னுடைய வருடாந்திர (2017) மனித உரிமை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைளின் போது பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கொல்லப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.