“என்னை இங்கிருந்து காப்பாற்றுகள், நான் கொலை செய்யப்படாலம்.” தனது வீட்டுக்காவல் குறித்து ஹாதியா

0

கேரளா மாநிலம் ஹாதியா மற்றும் ஷஃபின் ஜஹான் திருமணம் லவ் ஜிஹாத் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சட்ட விரோத வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹாதியா தனது நிலை குறித்து முறையிடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

24 வயது நிரம்பிய மருத்துவர் ஹாதியா இஸ்லாத்தை ஏற்றது தொட்டே பல பிரச்சனைகளுக்கு உள்ளானார். இவரது மதமாற்றம் மீது சந்தேகம் எழுப்பட்டு ஷஃபின் ஜஹான் என்பவருடனான அவரது திருமணமும் கேரள உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஹாதியா அவரது விருப்பத்திற்கு மாறாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் என்பவரால் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஹாதியா தனது நிலை குறித்து விளக்கியுள்ளார். அதில், “என்னை இங்கிருந்து நீங்கள் வெளியில் எடுக்க வேண்டும். நாளையோ நாளை மறுநாளோ நான் கொலை செய்யப்படலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் தந்தை மிகவும் கோபமுற்று இருக்கிறார். நான் நடக்கும் போது அவர் என்னை தள்ளியும் உதைத்தும் துன்புறுத்துகிறார். எனது தலையோ அல்லது உடலில் எதாவது ஒரு பாகமோ எங்காவது மோதி நான் இறந்தால்…” என்று முடிகிறது அந்த வீடியோ. இது கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த வீடியோவை வெளியிட்ட ஈஸ்வர் தன்னிடம் மேலும் பல வீடியோக்கள் உள்ளது என்றும் ஆனால் அவற்றில் மத சார்பு கருத்துக்கள் இருப்பதன் காரணத்தினால் பொதுமக்களின் பார்வைக்கு அதனை வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டதர்கான காரணம் ஹாதியாவின் கோரிக்கைக்கு நீதிமன்றத்தின் கவனத்தை பெறவே என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு இம்மாதம் 30 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக ஈஸ்வர் வெளியிட்ட வீடியோவில், “நான் இப்படித்தான் வாழ வேண்டுமா? இதைத் தான் எனது பெற்றோர்கள் விரும்புகின்றனரா?” என்று ஹாதியா தனது நிலை குறித்து கேள்வி எழுப்புகிறார். அதே கானொளியில் ஹாதியாவின் தாய் தனது மகள் தனக்கு திரும்ப வேண்டும் என்று அழுவதுவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களது விருப்பத்திற்கு மாறாக மதம் மாறி திருமணம் புரிந்தார் என்கிற காரணத்தினால் இவர்களின் திருமணத்தை லவ் ஜிஹாத் என்று குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்தார் இவரது தந்தை அசோகன். இந்த வழக்கில் NIA விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவரது வழக்கில் நீதிமன்றங்கள் ஹாதியாவின் கருத்தை கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.