என்புரட்சி: சிவப்பு களிறுகள்

0
  1. சிவப்பு களிறுகள்

நியூ இங்கிலாந்து கல்லூரியில் வெள்ளை மாணவர்கள் மத்தியில் உரையாற்றி விட்டு அப்போதுதான் நியூயார்க் திரும்பியிருந்தேன். ஹார்லெம் நகரில் ஏழாம் எண் பள்ளிவசால் அருகில் உள்ள, முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான, உணவு விடுதியில் இயக்கச் சகோதரர்களோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன்.

ப்ரதர்… கியூபா நல்லெண்ண கமிட்டியில் (fair play for cuba committee) நாளுக்கு நாள் உறுப்பினர்கள் அதிகமாக சேருவது பற்றி உங்க கருத்து என்ன? லூயிஸ் ஙீ கலந்துரையாடலை தொடங்கி வைத்தார்.

‘‘கியூபா நல்லெண்ண கமிட்டியால், அமெரிக்காவில் உள்ள கறுப்பர்களுக்கு என்ன நன்மை?’’ பெஞ்சமின் ஙீ வியப்பை வெளிப்படுத்தினார்.

போருக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து, ‘கியூபா நல்லெண்ண கமிட்டி’ என்ற பெயரில் இயக்கம் ஒன்றைத் தொடங்கி ஆதரவாளர்களை இணைத்து வந்தனர். கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் செயல்பாடுகளைக் கண்டிப்பதோடு, கியூப அரசுக்கு தார்மிக ஆதரவை வழங்குவதும் இவர்களின் நோக்கங்களில் ஒன்று.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.