என்புரட்சி

0

என்புரட்சி

40. தேவாலயத்தில் இஸ்லாமிய பிரச்சாரம்

“ஹலோ மிஸ்டர் எல்டர் மிஷாவ். எப்படி இருக்கீங்க? இந்தப் பக்கம்” எல்டர் மிஷாவ்வுடன் கை குலுக்கினார் ஹூவர். ஆச்சரியத்தோடு மிஷாவ்வைப் பார்ப்பதாக காட்டிக் கொண்டாலும், அவரை விரைவிலேயே சந்திக்க வேண்டும் என்ற ஆவலோடுதான் இருந்தார் ஹூவர்.
வெள்ளை மாளிகையில் அதிபர் கென்னடியைச் சந்திக்க வந்திருந்த இடத்தில், தன்னிடம் கைகுலுக்குபவர் யார் என அறியாமல் சற்று தடுமாற்றத்தை முகபாவணையில் வெளிப்படுத்தினார் மிஷாவ். இதை ஹூவரும் புரிந்து கொண்டார்.
“நான்தான் (திமீபீமீக்ஷீணீறீ ஙிuக்ஷீமீணீu ஷீயீ மிஸீஸ்மீstவீரீணீtவீஷீஸீ – திஙிமி) இயக்குநர் எட்கர் ஹூவர். உங்கள் பிரச்சாரத்தின் தீவிர ரசிகன் நான். எப்போது வீட்டில இருந்தாலும் டிவி முன்னாடி உட்கார்ந்திட்டா, உங்க பிரசங்கத்தைப் பார்க்க நான் தவறுவதே கிடையாது”
எல்டர் சாலமன் லைட்ஃபுட் மிஷாவ் (ணிறீபீமீக்ஷீ ஷிஷீறீஷீனீஷீஸீ லிவீரீலீtயீஷீஷீt விவீநீலீணீuஜ்) என்ற பெயர் அமெரிக்காவில் பிரபலமான பெயர். ரேடியோவில் கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்து அந்நாட்டு மக்களின் அபிமானத்துக்குரியவரான அவரை, திஙிமி-யின் ஏஜெண்ட்டாக மாற்ற ஹூவர் திட்டமிட்டிருந்தார்.
தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்பு, முதன்முதலில் தொலைக்காட்சியில் கிறிஸ்தவப் பிரச்சாரத்தை (ஜிமீறீமீஸ்ணீஸீரீமீறீவீst) தொடங்கியதும் எல்டர் மிஷாவ்தான்.
“ஓஹோ ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப சந்தோஷம்.. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக”
“எங்க ஆசிர்வாதம்?!” சலித்துக் கொண்டு தொடர்ந்தார் ஹூவர். “நாட்டுல நடக்குற பிரச்சனைகள் அத்தனையையும் நாங்கள்தான் பார்க்க வேண்டியிருக்கு. உங்களுக்கு செய்தி தெரியும்னு நினைக்கிறேன். கறுப்பர்களின் போராட்டம் இப்ப தெற்குப் பகுதியில அதிகரிச்சு ரத்தக் களறியா இருக்கு”
“வருத்தப்படாதீங்க பிரதர்.. எல்லாவற்றையும் கர்த்தர் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார். கர்த்தர் மேல் நாம் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. கர்த்தரை வழிபடுவதில்தான் அமெரிக்காவின் அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது. நான் இதைத்தான் போதித்து வருகிறேன். கறுப்பர்களின் போராட்டங்களெல்லாம் அவர்களுக்கு தீர்வைத் தராது. அமெரிக்கா முழுமையாக கிறிஸ்துவின் கைகளில் அடைக்கலமாகும் போது, எந்தப் பிரச்சனையும் இருக்காது சகோதரரே”
ஒரு சிறிய பிரசங்கத்தையே அவர் நடத்தி முடித்தார். அதேசமயம் எதை எதிர்பார்த்து ஹூவர் பேசிக் கொண்டிருந்தாரோ, அந்த வலைக்குள் எல்டர் மிஷாவ் விழுந்து கொண்டிருந்தார்.
“உங்களுக்கு புரிகிறது ஃபாதர். ஆனால் சில கிறிஸ்தவ மிஷனரிகளே போராட்டங்களைத் தூண்டி விடுறாங்களே” சரியான இரையை மாட்டித் தூண்டிலை வீசினார் ஹுவர். தெற்குப் பகுதியில் பிரபலமாகவுள்ள அருட்சகோதரர் மார்ட்டின் லூதர் கிங் மீதான மக்களின் மோகத்தைப் போக்க, இந்தப் பாதிரியாரைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டார் ஹுவர்.
“அவர்களுக்கும் சேர்த்துத்தானே நான் பிரச்சாரம் செய்து வருகிறேன் பிரதர்”
“ஃபாதர் நீங்கள் இந்தப் பிரச்சனையில் எங்களுக்கு உதவ முடியுமா?”
“நிச்சயமாக, கர்த்தரின் சித்தத்தைப் பரிபூரமணமாக்க, உங்களைப் போன்ற தீவிர கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டவர்களின் கீழ் இயங்கும் திஙிமி-க்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்” சிரித்துக் கொண்டே சொன்னார் எல்டர் மிஷாவ்.
அடிமைத்தனத்தை சட்டப்பூர்வமாக ஒழித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிந்து சென்று உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள், இப்போதும் இனப் பாகுபாட்டை தீவிரமாக கடைப்பிடித்தன. இனவெறியில் ஊறிய தெற்கு மாகாண வெள்ளையர்கள் கறுப்பர்களுடன் ‘ஒன்றிணைதலை’ கிஞ்சிற்றும் விரும்பவில்லை. உணவகங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்துகளில் கறுப்பர்களை இனவெறியோடு ஒதுக்கும் தெற்கு மாகாணங்களின் சட்டவிரோத செயல்களை, அமெரிக்க மைய அரசும், பெரும்பான்மை வாக்கு வங்கிக்குப் பயந்து பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனால் தெற்குப் பகுதியில் இனவெறி உச்சத்தில் இருந்தது.
பேருந்துகளில், கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களைப் போல சமஅந்தஸ்து அளிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி, ‘தன்னுரிமை சவாரி (திக்ஷீமீமீபீஷீனீ ஸிவீபீமீ)’ போராட்டத்தைத் தொடங்க இன சமத்துவ காங்கிரஸ் (சிஷீஸீரீக்ஷீமீss ஷீயீ ஸிணீநீவீணீறீ ணிஹீuணீறீவீtஹ்-சிளிஸிணி) அமைப்பின் தலைவர் ஜேம்ஸ் ஃபார்மர் (யிணீனீமீs திணீக்ஷீனீமீக்ஷீ) முடிவெடுத்தார்.
கறுப்பர்களை அனுமதிக்காத உணவகங்களில் உள்ளமர்வு (ஷிவீt-வீஸீ) போராட்டம் நடத்தியதைப் போல, பேருந்துகளில் வெள்ளையர்களுடன் அமர்ந்தும், பேருந்துகளின் முன்வரிசையில் அமர அனுமதிக்காத இருக்கைகளில் கறுப்பர்களை அமர வைத்தும் பேருந்து சவாரி மேற்கொள்வது என தீர்மானித்தது சிளிஸிணி அமைப்பு. இனவெறி அதிகம் உள்ள தெற்குப் பகுதிகளில் ஓடும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதுதான் ‘தன்னுரிமை சவாரிப்’ போராட்டத்தின் சிறப்பம்சமாகும்.
சிளிஸிணி உறுப்பினர்கள், மாணவர்கள், அறப்போராட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் (ஷிtuபீமீஸீt ழிஷீஸீஸ்வீஷீறீமீஸீt சிஷீஷீக்ஷீபீவீஸீணீtவீஸீரீ சிஷீனீனீவீttமீமீ – ஷிழிசிசி) என ‘தன்னுரிமை சவாரியாளர்கள்’ இந்தப் பயணத்துக்கு தயாரானார்கள். இந்தக் குழுவில் வெள்ளையர்களும் இடம் பெற்றிருந்தனர்.
வாஷிங்டன் பகுதியில் இருந்து மே மாதம் 4-ம் தேதி இரண்டு பேருந்துகளில் புறப்பட்ட தன்னுரிமை சவாரியாளர்கள் லூசியானா மாகாணம் வரை செல்ல திட்டமிட்டிருந்தனர். முதல்கட்டப் போராட்டம் மே 17-ம் தேதி வரையும், 1961-ம் ஆண்டு இறுதி வரை மேலும் 15 தன்னுரிமை சவாரி போராட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மே 14-ம் தேதி அலபாமா மாகாணத்தின் கிராமப் பகுதிகளின் ஊடே பேருந்து சென்று கொண்டிருந்த போது, வழிமறித்த வெள்ளையர்கள் அந்தப் பேருந்தை உடைத்து சேதமாக்கி, பயணிகளின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி மரண பயத்தைக் காட்டினர். இந்த அடக்குமுறைச் சம்பவம் தேசம் முழுவதும் உள்ள கறுப்பர்களை போராட்டத்திற்கு தூண்டியது.
*****
“கடவுளின் அருளால் சகோதரர் மால்கம் ஙீ இங்கு வந்திருப்பது பெருமைக்குரிய விஷயமாகும்” தேவாலயத்திற்கு வருகை தந்தவர்களுக்கு எல்டர் மிஷாவ் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
“நீங்கள் எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் உங்களைப் புரிந்து கொள்ளப் போகிறோம். நாம் இருவரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறோமா என்பதைப் பார்ப்போம்” அவர் அப்படிச் சொன்னதும் அங்கு சிரிப்பலை எழுந்தது.
நியூயார்க் நகரில் உள்ள எல்டர் மிஷாவ்வின் தேவாலயத்தில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜூன் 16-ம் தேதி மாலைப் பொழுது. இப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. அன்றைய தினம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, இனப் பிரச்சனையில் அதிபர் கென்னடியின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதாக, தன்னுரிமை சவாரியாளர்களின் போராட்டத்தை சுட்டிக்காட்டி தலையங்கத்தில் குற்றம் சாட்டியிருந்தது.
“எல்டர் மிஷாவ், அவரின் மனைவி, எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான எல்டர் மிஷாவ்வின் சகோதரரும் பிரபல ஆஃப்ரிக்க தேசிய நினைவு புத்தக நிலையத்தின் உரிமையாளருமான பேராசிரியர் லூயிஸ் மிஷாவ் மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதரர், சகோதரிகளே” அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியப் பிரச்சாரம் மேற்கொண்ட நான், முதன்முதலாக ஒரு தேவாலயத்திலேயே இஸ்லாத்தை நோக்கி அழைப்பு விடுக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன். லூயிஸ் மிஷாவ் மூலமே அவர் சகோதரரின் தேவாலாயத்தில் பேசும் வாய்ப்பு உருவானது.
“நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றேன். என்னை இங்கு வரவழைத்து பேச வைக்க வேண்டும் என்று எல்டர் மிஷாவ்வின் உள்ளத்தில் எண்ணத்தை உதிக்க வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன்.
என்னை இங்கு பேசுவதற்கு அழைத்திருக்கிறீர்கள். திறந்த மனம் கொண்டவர்களின் அடையாளமாகும் இது. பரந்த மனம் கொண்டவர்களால்தான் பரந்துபட்ட அளவில் சிந்திக்க முடியும். பரந்துபட்ட சிந்தனைதான் கறுப்பினத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றி வருகிறது. இறுகிய சிந்தனையும் குறுகிய மனதும்தான் நம் வாழ்வை நாசமாக்கி விட்டது.
அமெரிக்க அதிபர் கென்னடியால், ரஷ்ய அதிபர் குருஷேவ்வின் மனதை மாற்றி விட முடியுமா? அதேபோல குருஷேவ், கென்னடியை மாற்றி விடுவார் என எதிர்பார்க்க முடியுமா? முடியாது. ஆனால் பரம எதிரிகளான இருவரும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். எதிரெதிர் கருத்து கொண்டவர்கள் அமர்ந்து உரையாடுவது, ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ள வழிவகுக்கும். எதிர்க் கருத்து கொண்டவர்களின் குணாதிசியங்களைப் புரிந்து கொண்டுவிட்டால், அவரோடு சேர்ந்து இந்தப் பூமியில் வாழ்ந்து விட முடியும். இன்றைய உலகில் இது முக்கியமானதாகும். இதற்கான சந்தர்ப்பத்தை எங்களுக்கும் எல்டர் மிஷாவ்வுக்கும் ஏற்படுத்திக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். தேவாலயத்தில் இஸ்லாமியப் பிரச்சாரத்தின் அவசியம் என்ன? திடீரென இப்படியான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம், எல்டர் மிஷாவ்வுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டு விடக்கூடாது என நினைத்து பீடிகையுடன் பேச்சைத் தொடங்கினேன்.
“இன்று அமெரிக்காவில் அதிகம் பேசப்படும், எழுதப்படும் நபராக எலிஜா முஹம்மது இருப்பதாக எல்டர் மிஷாவ் தனது உரையின் போது குறிப்பிட்டார். எலிஜா முஹம்மது ஒன்றும் அரசியல்வாதி கிடையாது. அவரைப் பின்பற்றும் நாங்களும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கிடையாது. எங்களுக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் வெள்ளை மாளிகையில் அதிகாரத்தில் அமர்ந்தாலும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை. அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது ஒரு தந்திரம்தான். அமெரிக்காவின் பிரச்சனைகளை இந்த அரசியல்வாதிகளால் தீர்க்க முடியாது. இதனால்தான் நாங்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும், அரசியல் தீர்வுகளையும் நிராகரிக்கின்றோம்.
நாங்கள் இறைவனிடமே மீளுகிறோம். எங்கள் மூதாதையர்களின் மதத்தின் பக்கம், எங்கள் மூதாதையர்களின் கடவுளின் பக்கம் நாங்கள் திரும்புகிறோம்.
இறைத்தூதர் மோசஸ் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போதித்ததையே நாங்கள் இப்போது செய்கிறோம்.
பைபிளில் என்ன சொல்லப்பட்டுள்ளது? நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஃபாரோ மன்னனின் சமூகத்தில் அடிமைகளாக இருந்தவர்களின் நிலைகளைப் போலத்தான், நானூறு ஆண்டுகளாக அமெரிக்காவில் கறுப்பர்களின் நிலை உள்ளது.
அந்த அடிமைகளிடம் இருந்தே உதித்த இறைத்தூதர் மோசஸ் என்ன செய்தார்? அடிமைப்படுத்துபவர்களின் மதத்தையும் கடவுளையும் பின்பற்றுவதற்கு பதிலாக, இறைத்தூதர்கள் ஆபிரஹாமின் இறைவன், ஜேக்கப்பின் இறைவன், அவர்களின் மூதாதையர்களின் இறைவன் பக்கம் திரும்புமாறு போதனை செய்தார்.
என் பேச்சை அங்கிருந்தவர்கள் ரசித்துக் கேட்டனர். அங்கு நிலவிய நிசப்தம் அதை உணர்த்தியது.
நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு எல்டர் மிஷாவ் அழைத்துள்ளார். ஓர் இறைவனை நாங்கள் வழிபடுகிறோம். அரபிப் பதமான ‘அல்லாஹ்’ என்ற சொல்லால் அந்த இறைவனை அழைக்கிறோம்.
இறைத்தூதர் மோசஸ் வழிப்பட்ட, இறைத்தூதர் ஆபிரஹாம் வழிப்பட்ட அதே இறைவனைத்தான் நாங்களும் வழிபடுகிறோம்.
கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என மோசசுக்கு போதித்த அந்த இறைவன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என கறுப்பனுக்கு போதித்து விட்டு, வெள்ளையனுக்கு அப்படிப் போதிக்காத கடவுள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கவில்லை.
“கறுப்பர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுதலையடைந்து விடக்கூடாது என்பதற்காக அமைதியையும் சத்தியாகிரகத்தையும் போதிக்கும் சித்தாந்தத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கவில்லை. எத்தகைய வழிமுறைகளை மேற்கொண்டும், அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற போதிக்கும் சித்தாந்தத்தின் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.”
இஸ்லாம் என்பது விடுதலை இறையியல் என்பதை, அங்கிருந்த கிறிஸ்தவர்களின் ஆழ் மனதை ஊடுருவி சிந்தனையை உசுப்பினேன். தேவாலயத்தில் இஸ்லாமிய பிரச்சாரம் மேற்கொள்ள கிடைத்த வாய்ப்பை திருப்திகரமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இயேசுவும் முஸ்லிம்தான் என்பதை அழுத்தந் திருத்தமாக நிறுவ அடுத்து தயாரானேன்.
தொடரும்

Comments are closed.