என்புரட்சி

0

என்புரட்சி

  1. கிறிஸ்தவத்தை போதித்தாரா இயேசு?

“அல்லாஹ்”

இந்த ஒற்றைச் சொல்லை வாய் நிரம்ப சொல்லிவிட்டு, சற்று நிறுத்தினேன். என்னுடைய உச்சரிப்பும் தொனியும் பார்வையாளர்களை சிலிர்க்கச் செய்தது.

“இறைத்தூதர் மோசஸ் இறைவனை, ‘அல்லாஹ்’ என்றே அழைத்தார். ஆபிரஹாம் இறைவனை, ‘அல்லாஹ்’ என்றே அழைத்தார். நோவாவும், லூத்-தும் ‘அல்லாஹ்’ என்றே அழைத்தனர்.

அல்லாஹ் அல்லாஹ் லாமா சபக்தானி என்றே இயேசுவும் அழைந்தார்(”கிறீறீணீலீ கிறீறீணீலீ றீணீனீணீ ஷிணீதீணீநீலீtலீணீஸீவீ”). இயேசு பேசிய மொழியை அறிந்தவர்கள், அவர் கடவுளை ‘அல்லாஹ்’ என்றே அழைத்தார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்போது அவர் போதித்த மார்க்கமும், ‘இஸ்லாம்’ என்றே அழைக்கப்பட்டது.

இறைத்தூதர் இயேசு ஆங்கிலம் பேசியதே இல்லை. அனைத்து வல்லமையும் மாட்சிமையும் பொருந்திய சக்தியை அவர் ‘நிளிஞி’ என அழைக்கவில்லை. ஏனெனில் ‘நிளிஞி’ என்பது ஆங்கிலச் சொல்லாகும்.

தற்போது ஆங்கிலம் பேசி வரும் மக்களின் மூதாதையர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலம் பேசியிருக்க வாய்ப்பில்லை. ஐரோப்பாவில் குகைகளிலும் மலைக்குன்றுகளிலும் வசித்த மக்கள் நான்கு கால்களில் நடந்து கொண்டு பேசக்கூட தெரியாமல் இருந்தவர்கள்தானே?”

காட்டுமிராண்டிகள் என்ற பொருளில் வெள்ளையர்களைப் பற்றி குறிப்பிட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி சிரித்தனர்.

“இறைத்தூதர் இயேசு, தான் போதித்த மார்க்கத்தை ‘இஸ்லாம்’ என்றே அழைத்தார். இறைவனை ‘அல்லாஹ்’ என்றே அழைத்தார். ஆனால் நமக்கு எப்படி போதிக்கப்படுகிறது?

இறைத்தூதர் இயேசு தன் சீடர்களைப் பார்க்கும் போது, ‘றிமீணீநீமீ தீமீ uஸீtஷீ சீஷீu’ என்று வரவேற்றதாக பைபிள் குறிப்பிடுகிறது. அவருக்கு ஆங்கிலம் தெரியாத போது எப்படி இப்படி அழைத்திருக்க முடியும்?

உண்மையில் அவர் தன் தோழர்களைப் பார்த்து, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ – உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்றே முகமன் கூறியிருக்கிறார். அதற்கு அவர்களும் பதிலுக்கு ‘வ அலைக்குமுஸ் ஸலாம்’ -‘தங்கள் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்’ என்றே பதில் அளித்திருக்கின்றனர்.

இயேசு தன்னைப் பின்பற்றிய சமூகத்தினரை, ‘முஸ்லிம் சமூகம்’ என்றே அவர் பேசிய மொழியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்த சமூகம்தான் முஸ்லிம் சமூகம். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுமாறு தன் சமூகத்தினரை அவர் ஒரு போதும் பணிக்கவில்லை.

“இறைத்தூதர் இயேசு பின்பற்றிய அதே இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். அதேசமயம், யாராவது எங்களைத் தாக்கினால், தற்காப்புக்காகத் திருப்பித் தாக்க எங்கள் மார்க்கம் எங்களுக்கு கற்றுத்தருகிறது.”

இப்படிச் சொன்னதும் தங்களின் ஆழ்மனதில் கட்டுப்படுத்தி வைத்திருந்த உளக்குமுறலை ஆவேசமாக கைத்தட்டலாக வெளிப்படுத்தினர்.

“முஸ்லிம்களைப் பார்த்து வெள்ளையன் பயப்படுகிறான். ஏனென்றால், ஆசியாவிலும் ஆஃப்ரிக்காவிலும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் உள்ளனர். அந்த முஸ்லிம்கள் தினந்தோறும் ஐவேளைத் தொழுகையின் போது, “அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹூ, அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்” என்று கூறுகின்றனர். இதையேதான் நமது முன்னோர்கள் கூறினார்கள். இயேசுவும் இதையேதான் கூறினார். ஆபிரஹாமும் இதையேதான் கூறினார்.”

ஓர் அரேபியனைப் போல அரபி மொழியை நான் உச்சரித்ததை அங்கிருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். அவர்களுக்கு முஸ்லிம் என்று கூட சரியாக சொல்லத் தெரியாது. ‘மொஸ்லேம்’ என்றே மேற்குலகில் அழைத்து வந்தனர்.

“இதற்கு என்ன பொருள்? “அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹூ, அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்” என்றால், அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். முஹம்மது இறைவனின் தூதர் என நான் சாட்சி சொல்கிறேன் என்று பொருள்.

இந்த வாசகங்களை கேட்கும் போது வெள்ளையன் அச்சமடைகிறான்.

நீங்கள் பத்திரிகைகளில் வாசித்திருக்க முடியும். பிரபல வெள்ளை இன கிறிஸ்தவ மதபோதகரான பில்லி கிரஹாம் குறிப்பிடும் போது, ஆஃப்ரிக்காவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் என தெரிவித்துள்ளார்.

ஏன் ஆஃப்ரிக்க கறுப்பர்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறி, இஸ்லாத்தின் பக்கம் திரும்புகின்றனர்? ஆஃப்ரிக்க கறுப்பர்கள் விழித்தெழுந்து விட்டனர். தங்கள் கைகளில் மாட்டப்பட்டிருந்த விலங்கை உடைத்தெறிகின்றனர். கழுத்துகளில் மாட்டப்பட்டிருந்த நுகத்தடிகளை வீசியெறியத் துவங்கி விட்டனர். கிறிஸ்தவம் மூலம் காலனியாக்கிய ஐரோப்பியர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு, அந்தக் கிறிஸ்தவ மதத்தை தூக்கி வீசுகின்றனர்.”

ஆஃப்ரிக்க அமெரிக்க கறுப்பர்களின் பூர்வீக மார்க்கம் இஸ்லாம்தான் என்பதையும், நமது ரத்தத்தில் ஊறியிருக்கும் அடிமைத்தனத்திற்கு எதிரான ஆவேசம் இஸ்லாத்தின் மூலக்கூறுதான் என்பதையும் உணர்த்தினேன்.

“அமெரிக்காவிலே கறுப்பர்கள் அந்நியர்களைப் போல, அகதிகளாக, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். எந்த வித அடிப்படை உரிமைகளும் அற்ற அந்நியர்கள் நாம். பேருந்தில் அமர்வதற்கு கூட நமக்கு உரிமை கிடையாதுதானே. நான் சொல்வது சரிதானே?”

“மிகச் சரி, மிகச் சரி” என கூட்டத்தில் இருந்து வெறித்தனமாக கத்தினர்.

“ஆனால் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் என்ன சொல்லப்பட்டுள்ளது? ஆபிரஹாமை நோக்கி இறைவன்,

உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.

இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந் தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.”

“எகிப்தியர்களை அடிமைப்படுத்தியதற்காக ஃபாரோ மன்னனை இறைவன் கண்டிக்கிறான். பாபிலோனியர்களை அடிமைப்படுத்தியதற்காக நெபுக்கத்நஸர் மன்னனை இறைவன் கண்டிக்கிறான். ஆனால், இந்த மன்னர்களை விட மிக மிக மோசமாக அமெரிக்க கறுப்பர்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வரும் வெள்ளையர்களை மட்டும் இறைவன் மன்னித்து விடுவான் என எதிர்பார்க்கிறீர்களா? இது தவறான புரிதல் இல்லையா?

‘ஒன்றிணைதல்’ கொள்கையில் பிடிவாதமாக இருந்த கறுப்பர்கள், வெள்ளையர்களின் குரூரங்களை இயேசு கிறிஸ்து மன்னித்து விடுவார் என நம்பினர்.

“நாம் இந்த உலகத்தின் இறுதி நாட்களில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எல்டர் மிஷாவ், தன்னுடைய பிரசங்கங்களில் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் எந்த உலகத்தில்?

‘ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது’ என பைபிளில் சாலமன் குறிப்பிடுகிறார். இறைவன் இந்தப் பூமியை அழிக்கப் போவதில்லை. பூமியில் வாழும் மக்களைத்தான் அழிக்கப் போகிறான். ஒன்றுக்கும் மேற்பட்ட உலகம் இந்தப் பூமியில் உள்ளன.

“இங்கு மேற்குலம், கிழக்குலகம் என இரண்டு உலகம் உள்ளது. வெள்ளை உலகம்-கறுப்பு உலகம். பழைய உலகம்- புதிய உலகம். நன்மைகளின் உலகம்- தீமைகளின் உலகம். இதில் எந்த உலகை இறைவன் அழிக்கப் போகிறான்?”

முஸ்லிமான நான், வேதாகமத்தில் இருந்து வசனங்களை ஆதாரமாக காட்டி பேசுவதை என் எதிரே இருந்தவர்களால் நம்ப முடியவில்லை. சிலர் ஆச்சரியத்தில் பைபிளைத் திறந்து நான் குறிப்பிட்டுப் பேசிய வசனங்களை சரிபார்த்தனர்.

இதனைக் கவனித்த எனக்கு என் தந்தை நினைவுக்கு வந்தார். மதப் போதகராக இருந்த அவர், என்னை பலமுறை தேவாலயங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். நான் இன்று, தேவாலயத்திலேயே இஸ்லாமிய அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

“அல்ஹம்துலில்லாஹ்” என பேச்சின் ஊடே மனதில் உச்சாடனம் செய்தேன்.

“நீங்கள் கேட்கலாம், கறுப்பர்களை துன்புறுத்தும் வெள்ளை அமெரிக்காவை இறைவன் அழித்துவிட்டால், இந்தக் கறுப்பர்களை காப்பாற்றுவது யார்?

இறைத்தூதர் மோசஸைப் பார்த்து இறைவன் பைபிளில் இப்படிக் கூறுகிறான்,

‘உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்கு கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்கு சொல்லுவார்’.

“வேதாகமத்திலே உபாகமம் 18வது அதிகாரத்திலே 15வது வசனத்தில்,

‘உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக’ என மோசஸிடம் இறைவன் குறிப்பிடுகிறான்.

“நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். வேதாகமம் குறிப்பிடும் தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைத்தூதர் மோசஸ் போல ஒருவரை நாம் எதிர்பார்க்கிறோம். அதைப் பற்றியும் வேதாகமத்திலே சொல்லப்பட்டுள்ளது. எல்டர் மிஷாவ், நீங்கள் பைபிளில், மல்கியா ஆகமத்தில், 4வது அதிகாரம், 5வது வசனத்தில்,

‘இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்னே நான் உங்களிடத்தில் எலிஜா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்’ என இறைவன் குறிப்பிடுவதைப் படித்திருக்கலாம்.

“உலகம் அழியும் தருணத்தில் நீக்ரோக்களிடமிருந்து உதித்துள்ள ‘எலிஜா’, இறைத்தூதர் மோசஸைப் போன்றவர். மோசஸ் அடிமைகளையும் எஜமானர்களையும் நண்பர்களாக்கவில்லை. அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவில்லை. அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து அடிமைகளை மீட்பதுதான் அவர் பணியாக இருந்தது.

“பண்டைய காலத்தில் மோசஸ் செய்த இதே பணிகளைத்தான் நவீன மோசஸ் செய்வார். சாதாரண மனிதரான நவீன மோசஸ் ‘எலிஜா’ என அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட மனிதராகத்தான் எங்களைப் பயிற்றுவிக்கும் எங்கள் தலைவர் எலிஜா முஹம்மதுவை நாங்கள் பார்க்கிறோம்.

“இறைத்தூதர் மோசஸ், அடிமைப்படுத்திய எஜமானர்களை எச்சரித்தார். அடிமைகளுக்கு கற்றுக் கொடுத்தார். பைபிளில் கூறப்பட்ட, எதிர்பார்க்கப்படும் எலிஜாவின் பணியும் இதுதான். எங்கள் தலைவர் மரியாதைக்குரிய எலிஜா முஹம்மதுவின் பணியும் இதுதான். வெள்ளையர்களை எச்சரிப்பதும், கறுப்பர்களுக்கு கற்றுக் கொடுப்பதும்தான்!

உங்களுடைய உண்மையான பாரம்பரியம் பற்றி, உங்களுடைய உண்மையான வரலாற்றைப் பற்றி, வெள்ளையர்களைப் பின்பற்றி நீங்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் போலி வாழ்க்கைக்குப் பதில், நேர்வழியிலான வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு அவர் கற்றுக் கொடுக்கிறார்.

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் எலிஜா முஹம்மதுவை ஏராளமான கறுப்பு இளம் வயதினர் பின்பற்றி வருகின்றனர். அந்த இளம் சமூகம் குடிப்பதில்லை, புகைப்பதில்லை, போதைப் பொருட்கள் உபயோகிப்பதில்லை, சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை.

அந்த இளம் கறுப்பர்கள் பொய் பேசுவது கிடையாது, அந்த இளம் கறுப்பர்கள் யாரையும் ஏமாற்றி பிழைப்பு நடத்துவது கிடையாது, கெட்ட வார்தைதைகள் கூட பேசுவது கிடையாது.

எங்கள் அமைப்பில் உள்ள இளம் கறுப்பர்கள் திருமணத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி விபச்சாரத்தின் பக்கம் நெருங்குவதுகூட கிடையாது. நியூயார்க் போன்ற நகரத்தில் இருந்தால்கூட இந்தக் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபடுவது கிடையாது. மாறாக, கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொள்கின்றனர்.”

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் உள்ள இளம் வயதினரின் குணநலன்கள் ஒவ்வொன்றைப் பற்றி சொல்லும் போது, எனது வலது கையின் பின்பகுதியை, இடது உள்ளங்கையில் அடித்து அடித்துக் கம்பீரமாக குறிப்பிட்டேன்.

“இதெல்லாமே நமது கறுப்பின பாரம்பரியத்தில் உள்ளதுதான். ஆனால், நமக்கு வெள்ளையர்கள் என்ன கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்? நமது பொதுப்புத்தியில் எதை ஏற்றி வைத்திருக்கிறார்கள்?

கறுப்பர்கள் காடுகளில் வாழ்ந்த காட்டுவாசிகள், அவர்களைப் பிடித்து நாகரிகமானவர்களாக்கியது வெள்ளையர்கள்தான், வெள்ளையர்கள் போல நடந்து கொள்வதுதான் மேம்பட்ட வாழ்வு என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

கறுப்பர்களின் பூர்வீக குணநலன்களை மரியாதைக்குரிய தலைவர் எலிஜா முஹம்மது  நமக்கு கற்றுத் தருகிறார். நாம் கடவுளின் மக்கள். வெள்ளையன் சாத்தானின் பிள்ளைகள்.

விபச்சாரம் போன்ற கேடுகெட்ட செயல்களிலிருந்து கறுப்பின இளம் வயதினரை தடுத்ததோடு மட்டுமல்ல, கறுப்பின பெண்களை மதிக்கவும் எங்கள் தலைவர்  எங்கள் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக் கிறார். கறுப்பின பெண்களைப் பாதுகாக்க, அவர்களை முன்னேற்ற நாங்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம்.

வெள்ளைப் பெண்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். வெள்ளைப் பெண்களைப் பாதுகாக்க, வெள்ளையன் இருக்கிறான். வெள்ளைப் பெண்களை மோகம் கொள்ளும் கறுப்பர்களை அடித்தே கொலை செய்து விடுவான் வெள்ளையன். ஆனால் நமது பெண்களைப் பாதுகாக்க? கறுப்பினப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அவளை முன்னேற்ற யாரும் இல்லை. அவளை ஒரு பெண்ணாக, ஏன் மனித உயிராகக்கூட மதிக்க ஆள் இல்லை. ஆனால் எலிஜா முஹம்மதுவைப் பின்பற்றுபவர்கள், பெண்களை மதிக்காதவரை அவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது.”

நான் பேசி முடித்ததும், அங்கு குழுமியிருந்த பெண்களின் கைதட்டல், ஆண்களின் கைதட்டல் அடங்கிய பின்பும் நீண்டது. அது அங்கிருந்த ஆண் கிறிஸ்தவர்களை குற்ற உணர்ச்சியில் தள்ளியது.

தொடரும்

Comments are closed.