என்புரட்சி-18: சிறையிலிருந்து விடுதலை

0

என்புரட்சி: 18. சிறையிலிருந்து விடுதலை

நான் விடுதலையாகும் தேதியை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். சகோதர, சகோதரிகளுக்கும் எலிஜா முஹம்மதுவுக்கும் அதைப் பற்றித் தெரிவித்து கடிதம் எழுதினேன். ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி, 1952-ம் ஆண்டு, சார்லஸ் டவுண் சிறையில் இருந்து நான் விடுதலையானேன். 2353 நாட்கள் சிறையில் கழித்த நான், மீண்டும் சிறைக் கம்பிகளைப் பார்க்கக் கூடாது என்ற உறுதியோடு அந்தச் சிறையை திரும்பிப் பார்க்காமல் புறப்பட்டேன்.

அக்கா யெல்லாவின் வீட்டிற்குச் சென்றேன். அங்கு அக்கா ஹில்டாவும் இருந்தாள். நன்றாக எண்ணெய் தேய்த்து குளித்தேன். சிறைச்சாலை அழுக்கிலிருந்து விடுதலையான உணர்வைப் பெற்றேன். அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன். படிப்பு இல்லை. போதைப் பொருள் விற்றது, விபச்சார தரகன், வீடுகளில் புகுந்து திருடியவன்,- இதற்காக சிறை சென்றவன். இத்தகைய குற்றப் பின்னணியுள்ள நான் வாழ்க்கையை நகர்த்த அடுத்து என்ன செய்ய முடியும்?

“மால்கம், திரும்ப பாஸ்டனுக்கா, ஹார்லெமுக்கா? எங்க போகப் போற?” அக்கா யெல்லா கேட்டாள். அக்கா யெல்லா கேட்ட இந்த நொடியில், எனது தெருவோர ரவுடி வாழ்க்கை மின்னல் போல என் கண் முன்னே ஒரு கணம் வந்து மறைந்தது. நான் எந்த பதிலும் சொல்லாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.

“வேணாம் மால்கம்.. நீ டெட்ராய்ட் போயிடு. வில்ஃப்ரட் அங்க இருக்கான். அந்த ஏரியாதான் உனக்கு சரியா இருக்கும்…” ஹில்டா சொன்னாள்.

ஹில்டா அக்கா வேறொரு பொருளில் இதைத் தெரிவித்தாள். அப்போது அவள் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தாள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.