என்புரட்சி 21. தீவிர அழைப்புப் பணி

0

என்புரட்சி 21. தீவிர அழைப்புப் பணி

நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் நிர்வாக வசதிக்காக, நாங்கள் நிர்மானித்த பள்ளிவாசல்களுக்கு எண்கள் வழங்கப்பட்டது.

நான் பாஸ்டன் நகரில் உருவாக்கிய மசூதியின் எண் 11. ஏறக்குறைய பாஸ்டனில் நான் ஆறு மாதங்கள் தங்கி, இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டு பள்ளிவாசலை உருவாக்கினேன். 1954-ம் ஆண்டு மார்ச் மாதம், பிலடெல்பியா பகுதிக்குச் செல்லுமாறு தலைவர் எலிஜா முஹம்மது எனக்கு கட்டளையிட்டார்.

பாஸ்டனைப் போல அல்லாமல், பிலடெல்பியா பகுதி கறுப்பர்கள் விரைவிலேயே என்னுடைய பிரச்சாரத்திற்கு பதில் அளித்தனர். வெள்ளையர்களின் வரலாற்றுத் துரோகத்தை புரிந்து கொண்ட அவர்கள், இஸ்லாம்தான் கறுப்பர்களின் பூர்வீக மதம் என்பதையும் உணர்ந்து கொண்டனர். மே மாத இறுதிக்குள் பிலடெல்பியாவில் 12-ம் எண் பள்ளிவாசலை உருவாக்கினேன்.

என்னுடைய ஓய்வு ஒழிச்சல் இல்லாத இஸ்லாமிய அழைப்புப் பணியின் வேகத்தைப் பார்த்த தலைவர் எலிஜா முஹம்மது, என்னை நியூயார்க் நகரத்திற்கு செல்லுமாறு பணித்தார்.

அமெரிக்காவின் அடையாளமாக நியூயார்க் நகரைச் சொல்லலாம். கல்வி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பிரதிபலிக்கும் நகரம்தான் நியூயார்க். அதேபோல அமெரிக்கச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை பிரதிபலிக்கும் நகரமும் நியூயார்க்தான். உலகின் சோபைகள் அனைத்தும் நியூயார்க் நகரை அழகுபடுத்தினாலும், அந்த நகரின் கழிவறை போல சோபையற்று கிடக்கும் பகுதி ஹார்லெம்.

அதிர்ச்சி திருப்பங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் போல என் வாழ்க்கை நிகழ்வுகள் அமைகின்றன, அல்லாஹ்வின் நாட்டத்தால்… … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.